Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 05

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 5


🔸️ சாட்சியான வாழ்விற்கும் ஊழியத்திற்கும் அபிஷேகம் வேண்டும்! 🔸️


நாம் கர்த்தருக்கு ஊழியஞ் செய்வதற்கும், அவருக்கென வல்ல சாட்சியாய் விளங்குவதற்கும் பரிசுத்தாவியின் அபிஷேகம் மிகவும் அவசியமாயிருக்கிறது. இன்று அநேக விசுவாசிகள், மனந்திரும்பியவுடன், ஆண்டவருக்கென சாட்சி பகர வேண்டுமென்பதை உணருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் இச்சமயத்தில் தங்கள் நாவு கட்டப்பட்டு சாட்சி பகர்வதற்கு வல்லமையற்று இருப்பதையும் காண்கிறார்கள். இவ்வாறு இருப்பதை சிலர், "தங்களின் துரதிருஷ்டமான குணாதிசயம்" என எண்ணிக்கொண்டு இனியும் தாங்கள் கிறிஸ்துவுக்கு வல்லமையுள்ள சாட்சியாய் விளங்க முடியுமா என எல்லா நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள்!


இவர்களைத் தவிர, வெகு சிலராகிய வாஞ்சையுள்ள கூட்டத்தார், தேவன் தங்களுக்கு பரிசுத்தாவியின் வல்லமையை தருவதாக வாக்களித்திருக்கிறார் என்பதை கண்டறிகிறார்கள். இவர்கள்தான், முழு மூச்சாய் தேவனைத் தேடி இந்த வல்லமையை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுகிறார்கள்! இப்போது இவர்கள் மிகுந்த "தைரியத்தினால்" நிரம்பிவிடுகிறார்கள்!! மேலும், கிறிஸ்துவுக்கென வெட்கமின்றி அனல்கொண்ட வல்ல சாட்சிகளாய் இருப்பதற்கு, இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக வரங்களையும் தேவனிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுகிறார்கள்.


நாம் ஆவியினால் பிறப்பதென்பது வேறு! அப்படித்தான் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறினோம். ஆனால், நாம் பரிசுத்த ஆவிக்குள் மூழ்கி அபிஷேகம் பெறுவதென்பது முற்றிலும் வேறு!! இவ்விதமாகவே, நாம் எப்படி வாழ தேவன் விரும்புகிறாரோ அதற்குரிய வல்லமையையும், நாம் என்ன ஊழியம் செய்ய தேவன் விரும்புகிறாரோ அதற்குரிய வல்லமையையும் தரித்துக் கொள்ளுகிறோம்!!


இயேசு நிறைவேற்றப்போகும் இரண்டு ஊழியங்களை யோவான் ஸ்நானகன் சுட்டிக்காட்டினார். 1)பாவத்தை சுமந்து தீர்ப்பதும் 2)தம் ஜனங்களை பரிசுத்தாவியினால் அபிஷேகிப்பதுமே அவ்விரு ஊழியங்களாகும் (யோவான் 1:29,33). நாம் இவ்விரு ஊழியங்களையுமே நம் ஜீவியத்தில் அனுபவமாக்கியிருக்க வேண்டும்!


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! இரட்சிக்கப்பட்ட பிறகு சாட்சியாய் வாழ பெலனற்று இருப்பதை உணர்கிறோம்! தயவாய் உம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தந்தருளி, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ பெலன் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments