இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 10
🔸️ சிக்கலான குடும்ப சூழ்நிலையை இயேசு மாற்றிட முடியும்! 🔸️
யோவான் 4 ஆம் அதிகாரத்தில் தேவை மிகுந்த ஒரு சமாரிய ஸ்திரீயை குறித்து வாசிக்கிறோம். அவளுடைய வாழ்க்கை புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையாகவே இருந்தது. திருமணம் செய்து கணவன் மரித்ததால், பின்பு மறு திருமணம் செய்து. . . .இவ்வாறு ஐந்து முறை அவளுக்கு சம்பவித்து விட்டது. இப்போது அவளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனுஷனோ அவளுடைய கணவர்கூட இல்லை. தன்னுடைய ஜீவித்தை குறித்து அவளே மிகவும் சலிப்படைந்தவளாய் இருந்தாள். யூதர்கள், சமாரியர்களை "ஒரு தாழ்ந்த ஜாதி" என்றே நிந்திப்பார்கள். பொதுவாய் சமாரிய ஸ்திரீகள், தங்கள் கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு காலையிலேயே சென்று தண்ணீர் மொண்டு வருவார்கள். ஆனால் இவளோ இந்த கிராமத்தின் மற்ற பெண்களின் மத்தியில் அநேக துன்பமான அனுபவங்களை அடைந்திருக்க வேண்டும். அந்தப் பெண்கள் இவளை உதாசீனம் செய்து, அவளைத் தங்களை விட்டு புறக்கணித்து விட்டார்கள்! அவளுக்கோ, சமாரியாவில் வெட்கமும், புறக்கணிப்பும், வருத்தமுமே ஒரு தொடர்ச்சியான பங்காய் இருந்திருக்க வேண்டும். இதன் நிமித்தமே தன்னைச் சுற்றி ஒருவரும் வராத மதிய வேளையில் அவள் கிணற்றுக்குச் சென்றாள்! தன்னுடைய இவ்வித சூழ்நிலையில், ஒரு புருஷனை கிணற்றங்கரையில் கண்ட போது எவ்வளவு ஆச்சரியமடைந்திருப்பாள் என்பதை எண்ணிப் பாருங்கள்!
நம் எஜமானனாகிய ஆண்டவரோ அவளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே சமாரியாவின் வழியாய் பயணம் மேற்கொண்டிருந்தார்!
மேலும் அந்த மத்தியான வேளையில் அந்த கிணற்றண்டை அமர்ந்து அவளோடு பேசுவதற்கு காத்துக்கொண்டிருந்தார்!! அப்போது அவருக்கு இருந்த "தாகத்தை" தன் சம்பாஷணையின் துவக்கமாய் வைத்துக்கொண்டு. . . .படிப்படியாய், "ஜீவத்தண்ணீரின்" தேவையை அவளுக்கு அவர் உணர்த்தினார்! முடிவில், அந்த முழு கிராமத்தையும் அழைத்து வந்து மனந்திரும்பச் செய்யும்படியாய் ஆண்டவர் அவளை பயன்படுத்தினார்!!
பார்த்தீர்களா, சமுதாயத்தால் புறக்கணித்துத் தள்ளப்பட்டவர்களுக்கு இயேசு எவ்வளவாய் நம்பிக்கையைத் தருகிறார்! நீங்களோ ஒடுக்கப்பட்டவர்களாக அற்பமாய் கருதப்படும் தாழ்ந்த ஜாதியினராய். . . . உங்கள் உரிமைகளுக்காய் போராடிட ஒருவர்கூட இல்லாதவர்களாய் இருக்கக்கூடும்! உங்களுக்கு இதோ ஓர் நற்செய்தி! ஆம், இனியும் நீங்கள் கலங்கிட தேவையில்லை! உங்களுக்காகவே உங்கள் மீட்பர் இதோ வந்து விட்டார்! !
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! மாறி மாறி வந்த சூழ்நிலைகளில் குடும்பத்தின் சிக்கல் பெரிதானாலும், அதை விடுவிக்க நீர் வருவீர்! என காத்திருக்கும் விசுவாசம் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments