இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 9
🔸️ 'நொறுங்குண்டு' தேவனைசார்ந்து, கோலில் சாய்ந்த யாக்கோபு! 🔸️
யாக்கோபின் சாட்சியை எபிரேயர் 11-ம் அதிகாரம் நேர்த்தியாய் பறைசாற்றுகிறது. அந்த அதிகாரத்தில், பழைய ஏற்பாட்டு விசுவாச வீரர்கள் புரிந்த மாபெரும் செயலான 'சிங்கத்தின் வாயை அடைத்தார்கள்!' 'மரித்தோரை உயிரோடு எழுப்பினார்கள்'..... என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது! அந்தப் பட்டியலில் இந்த யாக்கோபின் பெயரும் எழுதப்பட்டிருக்கிறது! அவனைக் குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? "தன் கோலின் முனையிலே சாய்ந்து கர்த்தரைத் தொழுது கொண்டான்" (வசனம் 21) என்றே எழுதப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரம் முழுவதும் அற்புத நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்த வேளையில், "ஒரு சாதாரண நிகழ்ச்சியாய்" யாக்கோபைக் குறித்து எழுதியிருப்பது ஆச்சரியமாயில்லையா?
யாக்கோபு புரிந்த செயல் "விசுவாசத்தின் அற்புதமாய்" நமக்குத் தோன்றவில்லை என்பது உண்மைதான். ஆனால் உண்மை என்னவென்றால், பதிவு செய்யப்பட்ட விசுவாச வீரர்களின் அற்புதத்தைக் காட்டிலும் யாக்கோபின் செயலே மேலான அற்புதம் என நாம் கூறிட முடியும்! இந்த யாக்கோபிற்கு 'கோல்' அவசியமாய் இருந்தது. ஏனெனில், பெனியேலில் அவனுடைய தொடைச்சந்தை தேவன் தொட்டு சுளுக்கி விட்டார்!! இப்போது கோலின்மேல் சாய்ந்துகொண்ட யாக்கோபு, தன் வாழ்க்கையில் "சுயத்தில் எத்தனாயிருந்த தன்னை தேவன் நொறுங்கச் செய்த" அற்புதத்தை சதா எண்ணி தியானிக்கிறவனாய் மாறினான்!
கோலின்மேல் அவன் சாய்ந்து கொண்ட செயல், தன் நாதியற்ற நிலையை வெளிப்படுத்துவதாகவும். . . அவன் தேவனையே சார்ந்து வாழ்வதைப் பிரகடனம் செய்வதாகவும் இருந்தது!! நொறுங்குண்ட அந்த யாக்கோபு தேவனைத் தொழுது கொண்டான்!! தன்னுடைய பெலவீனத்திலும் தன் இயலாமையிலும் அவன் மேன்மை பாராட்டினான். . . அதுதான் அவனிடத்தில் நாள்தோறும் நாம் காணும் ஒப்பற்ற சாட்சியாக விளங்கியது! அதே சாட்சியைத்தான் அப்போஸ்தலனாகிய பவுலும் பெற்றிருந்தார். யுகங்களாய் தொடர்ந்து வரும் மாபெரும் தேவ புருஷர்களும் ஸ்திரீகளும் இதே சாட்சியைத்தான் பெற்றிருக்கிறார்கள். தங்கள் பெலனற்ற இயலாமையில் அவர்கள் மேன்மை பாராட்டினார்களேயல்லாமல். . . சாதனையில் ஒருக்காலும் மேன்மை பாராட்டியதே இல்லை!
தாழ்மையின் சிகரத்தில் வாழ்ந்து சென்ற இந்த சிலரின் வாழ்க்கை. . . இன்றைய 21-ம் நூற்றாண்டின் அகங்காரமும், பெருமையும், சுய நம்பிக்கையும் கொண்ட கிறிஸ்தவர்களுக்கு சீர்மிகுந்த பாடமாய் இருப்பதாக!!
ஜெபம்:
பரம பிதாவே! 'நொறுங்குண்டு' உம்மையே சார்ந்து வாழும் யாக்கோபின் ஒப்பற்ற சாட்சி, எங்கள் சாட்சியாய் மாறிட அருள் புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments