Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 23

 இன்று "அவருடைய" சத்தம்


 ஜூன் 23


🔸️ குடும்பத்தை கணவனே தலைமைதாங்க வேண்டும்! 🔸️


மானிடவர்க்கத்தில் ஒருவரும் செய்திடாத "தீர்மானிக்கும் முதல் தீர்மானத்தை" ஏவாள் செய்துவிட்டாள். அவள் அன்று எடுத்த முக்கிய அத்தீர்மானத்தை தன் கணவனிடம் ஆலோசனைகூட கேட்காமல் எடுத்துவிட்டாள்! இங்குதான் பாவம் உள்ளே பிரவேசித்தது! இங்குதான் "பாலைவனம்" தொடங்கியது!! இந்த உண்மையை மனைவியாக இருக்கும் நீங்கள் யாவரும் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்! அவ்வேளையில் ஏவாள் சாத்தானிடமிருந்து உண்மையில் எதைப் பெற்றால் தெரியுமா? ஆளுகைக்கு அடங்கியிருக்க விரும்பாத முரட்டாட்டமான "சாத்தானின் ஆவியையே" தனக்கென வாங்கிக்கொண்டாள்!  


ஏவாள் வஞ்சிக்கப்பட்டபோது அவள் ஒன்றும் தோட்டத்தில் தனியாக இல்லை! அவளோடு ஆதாமும் நின்று கொண்டுதான் இருந்தான்! எனவேதான், ஸ்திரீயானவள் அந்த விருட்சத்தை நல்லதென்று கண்டு, "அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்!" (ஆதி 3:6) என நாம் வாசிக்கிறோம். இந்த இடத்தில் தேவன் குடும்பத்திற்கு நியமித்த தலைமையை மனைவி எடுத்துக்கொள்வதை தன் கண்களுக்கு முன்பாகவே ஆதாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன், தேவன் தனக்குக் கூறியதை அவளிடம் எடுத்துக் கூறி "அக்கனியைத் தொடாதே, அது பாவமானது!" என கூறினானா? இல்லை. அவன் தன் மனைவியை தடுக்கவில்லை. எனவேதான், தேவன் மிகுந்த வருத்தத்துடன் "நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்துவிட்டாயே!" என ஆதாமைப் பார்த்து கூறினார் (ஆதி 3:17). ஆம், இன்றும் அநேக கணவன்மார்கள் சாத்தான் தங்கள் மனைவியை ஆட்கொண்டு "அவள் தலைமையேற்று செய்வதை சும்மா நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்".


ஒரு மிக முக்கியமான பாடத்தை இங்கு நாம் கற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? ஆதியிலே தேவன், குடும்பத்தில் கணவனைத் தலைவராகவும், மனைவி அத்தலைமைக்கு மகிழ்ச்சியுடன் அடங்கியிருக்கும்படியும் ஏற்படுத்தியிருந்தார். அவள் அடங்கியிருக்காமல், தானாகவே ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடாது. ஏவாளோ தன் கணவனிடம் ஒரு ஆலோசனைகூட கேட்கவில்லை! ஆதாம் அவளோடுதான் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தான். "தன் புருஷனிடத்தில் கேட்போமே" என்ற ஒரு சிறிய சிந்தைகூட இல்லாமல்.... சாத்தானிடம் கலந்தாலோசித்து, அவளே ஒரு முடிவு எடுத்து விட்டாள். நாம் அப்படி இருக்கலாகாது!


 ஜெபம்:

பரலோக தகப்பனே! குடும்பத்தில் எங்கள் ஒவ்வொருவர் பொறுப்பையும், ஸ்தானத்தையும் இழந்திடாது வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments