இன்று "அவருடைய" சத்தம்
மே 19
🔸️ அனுதினம் கிறிஸ்து நம்மில் பிழைத்திருக்க வேண்டும்! 🔸️
ஒரு புதிதான மறுபிறப்பு நம் வாழ்வில் நிகழும் ஒப்பற்ற செயல் என்பது உண்மைதான். ஆனால், நிகழ்காலமாகிய இன்றுள்ள நம்முடைய ஆவிக்குரிய ஜீவியமே இப்போது மிகவும் முக்கியமாகும். இதற்கு மாறாக, நாம் எந்தத் தேதியில் மறுபடியும் பிறந்தோம் என்ற குறிப்பு மாத்திரம் போதுமானது அல்ல! சிலர், தங்கள் வாழ்வில் நடந்தேறிய மறுபிறப்பின் நாளைச் சரியாக ஞாபகத்தில் வைத்திருக்காமலே இருக்கிறார்கள். அதினால் என்ன? ஒரு மனிதன் தன் பிறந்த தேதியை ஞாபகத்தில் கொண்டிராததினிமித்தம், அந்த மனிதன் 'செத்தவன்' என நாம் கூறுவதில்லையே! இருப்பினும், இன்று அநேக கிறிஸ்தவர்கள், தங்கள் மறுபிறப்பின் அனுபவ சாட்சியை தங்களின் நிகழ்கால ஜீவியத்திற்கு சாட்சியாக வைத்திருப்பது, கொடிய துயரமேயாகும்!!
அதுபோலவேதான், ஆவியில் நிறைந்த ஜீவியமும் இருக்கிறது. ஆம், நடைமுறையில் நிகழ்காலத்தில் வாழ்ந்திடும் கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையும், ஊழியமுமே மிக முக்கியமானதாகும்! இதற்கு மாறாக, கடந்த கால அனுபவங்களின் நினைவுகள் எத்தனை அற்புதமும் பரவசமும் கொண்டதாக இருந்தாலும், அதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை!!
அனுபவங்களையும், ஆசீர்வாதங்களையுமே வைத்து திருப்தி காணாமல், சிலுவையை அனுதினமும் எடுத்து இயேசுவைப் பின்பற்றி "இனி நான் அல்ல! கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார்!!" (கலா.2:20) என்ற ஜீவவார்த்தையை தங்கள் ஜீவியத்திலும், ஊழியத்திலும், நடைமுறையில் வாழ்ந்துகாட்டும் புருஷர்களையும், ஸ்திரீகளையும் காணவே தேவன் வாஞ்சையுடன் காத்திருக்கிறார்!!
இதுவே... ஆம், இது ஒன்றே ஆவியில் நிறைந்து வாழும் அற்புத ஜீவியமாகும்!
"இனி நான் அல்ல...
கிறிஸ்துவே கனப்பட்டு, அன்புகூரப்பட்டு, உயர்ந்திருப்பாராக!
இனி நான் அல்ல...
கிறிஸ்துவே காணப்பட்டு, அறியப்பட்டு, கேட்கப்படுவாராக!
இனி நான் அல்ல...
கிறிஸ்துவே என் பார்வையிலும், செயலிலும், காணப்படுவாராக!
இனி நான் அல்ல... கிறிஸ்துவே என் சிந்தையிலும், வார்த்தையிலும் நிறைந்திருப்பாராக!!"
"என்னிலிருந்து இரட்சிப்படைந்து,
உம்மில் நான் உறைந்து போயிட,
இனி ஒருபோதும் 'நான்' என இல்லாமல் கிறிஸ்துவே என்னில் பிழைத்தோங்கிட அன்புள்ள ஆண்டவா... அருள்புரிவாய்!"
ஆமென்! ஆமென்!!
ஜெபம்:
பரலோக பிதாவே! எங்கள் அனுதின சிலுவை எடுத்துவரும் ஜீவியம் "இனி நான் அல்ல... கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்" என்ற பாக்கியத்திற்குள் பிரவேசித்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments