Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 28

 இன்று "அவருடைய" சத்தம்


மே 28


🔸️ திருமண நேரத்தில் வாலிபர்கள் சீர்குலைந்திடக் கூடாது! 🔸️


"திருமண விஷயத்தில்" வாலிபர்களும் வாலிப பெண்களும் அதிகமாய் சோதிக்கப்படுகிறார்கள். ஏராளமான விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையில் மிகத் தெளிவாய் போதிக்கப்பட்ட சத்தியத்தை அறிந்திருந்தும் "அவிசுவாசிகளைத் திருமணம் செய்கிறார்கள்!" தங்கள் மாணவப் பருவத்தில் கிறிஸ்துவுக்காக தைரியமாய் நின்ற அநேகர், திருமணத்தின் பிற்காலத்தில் மா வீழ்ச்சி அடைந்துவிட்டார்கள். தேவனுக்கு வல்லமையாய் பயன்படுவதற்கு துவங்கிய இவர்கள் வாழ்க்கையின் "முழுப்பயனும்" இத்திருமண விஷய ஒத்த வேஷத்தால் தவிடு பொடியாகிவிட்டது! 


நம் இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு திருமண விஷயம் வரும்போது, அவர்களை சந்திக்கும் அழுத்தங்கள் ஏராளமானதாய் இருக்கிறது. இவர்களின் பெற்றோர்களிடமிருந்து வரும் அழுத்தங்கள், மனந்திரும்பாத, மெய்யான அக்கறையே இல்லாத உறவினர்களிடமிருந்து வரும் அழுத்தங்கள் ஏராளம் ஏராளம்! இதோடு சேர்த்து பொருளாதார அழுத்தங்களும் இவர்களுக்கு ஏற்படுகின்றன. வரதட்சணை சம்பிரதாயங்களும் இவர்களை வாட்டி வதைக்கிறது! 


இதைக்காட்டிலும் துயரமாய், இந்த இளைஞர்கள் கிறிஸ்துவுக்குள் வந்த பிறகுகூட நம் தேசத்தின் புறஜாதியார் கலாச்சாரமாகிய "ஜாதி முறைகளை" இன்னமும் விட்டுவிடாமலே பற்றிக் கொண்டிருக்கிறார்கள்! இவ்வாறு பிசாசினால் கொண்டுவரப்படும் மேற்கண்ட அழுத்தங்களுக்கு எண்ணற்ற வாலிப கிறிஸ்தவர்கள் அவனுக்குத் தாழ்பணிந்து "ஆவிக்குரிய பொருத்தமில்லாதவர்களுக்கு இணங்கி" திருமணம் செய்து கொள்கிறார்கள். 


உங்கள் ஜீவியத்தில் இதுபோன்ற இந்த திருமண "இக்கட்டு நேரம்" வந்துவிட்டதா? நான் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்:


நீங்கள் பெற்ற விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தோடு உறுதியுடன் நில்லுங்கள்! பிசாசு கொண்டு வந்த ஒவ்வொரு அவிசுவாச திருமண நுகத்தடியையும் மறுத்துவிடுங்கள்! அவன் கொண்டுவந்த நுகத்தடியை உங்கள் மீது பூட்டுவதற்கு பெரும் படையே திரண்டு வந்தாலும் இணங்கி விடாதீர்கள்! அவருடைய சித்தத்திற்காக ஜெபத்துடன் தேவனுடைய உதவியை நாடுங்கள்! அவர் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார்! அவரைக் கனப்படுத்திவிடுங்கள்...அப்போது, தான் தெரிந்து கொண்ட துணையை அவர் உங்களுக்குத் தருவார்! தேவனே தெரிந்தெடுத்து நமக்குத் தருவது எதுவோ, அதுமாத்திரமே நம் வாழ்வில் மகா மேன்மையும் அருமையுமானதாகும்!!


ஜெபம்:

பரம தந்தையே! உம்மீது கொண்டிருந்த வாலிப வைராக்கியம், எங்கள் திருமண நேரத்தில் சீர்குலைந்து, வேத வாக்கிற்கு புறம்பாய் சென்றுவிடாதிருக்க அருள் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments