இன்று "அவருடைய" சத்தம்
மே 30
🔸️ மெய் கிறிஸ்தவ ஜீவியத்தில் 'பயம்' இருப்பதில்லை! 🔸️
மரித்து கீழே விழும் 'ஒரு அடைக்கலான் குருவியைகூட' அவர் காணத் தவறுவதில்லை! அதுபோலவே, நம் தலையில் இருந்து விழும் முடியையும்கூட அவர் காணத்தவறுவதில்லை!! "தன் சொந்த குமாரனென்றும் பாராமல் நம் எல்லோருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு நிச்சயமாக அருள்வார்" (ரோமர் 8:32). யாதொரு நன்மையையும் நமக்கு அவர் தராது இருக்கவே மாட்டார்! எல்லாம் நம்முடையதே!! (1கொரிந்தியர் 3:22).
நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத எந்த சோதனையையும் அவர் அனுமதிக்கவே மாட்டார். இவ்வாறு தேவன் நமக்குத் தந்திருக்கும் உத்தரவாதத்தை 1கொரிந்தியர் 10:13-ம் வசனத்தில் நாம் காண்கிறோம். இந்த உத்தரவாதம் நிரந்தர "ஆயுட்கால - உத்தரவாதமாகும்."
நம் வாழ்வில் சந்திக்கும் ஒரு யூதாஸ்காரியோத்துகூட, அவருடைய நோக்கம் நம்மில் நிறைவேறுவதற்காக பயன்படும் ஓர் உபகரணமாகவே நம் அன்பின் பிதாவின் கையில் செயல்படுகிறது! ஆகவே, நம் ஜீவிய பாதையில் "விரோதமான சூழ்நிலைகள்" குறுக்கிடும்போது, கெத்செமனேயில் பேதுரு செய்ததுபோல நம்முடைய பட்டயத்தை நாம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! அதற்கு மாறாக, இயேசுவைப் போலவே "மெய்யான ராஜாக்களைப்போல்" நின்று, கண்ணியமாய் நடந்து, எந்த சூழ்நிலைக்கும் நம்மை ஒப்புக் கொடுத்திட முடியும்! கவர்னராயிருந்த பிலாத்துவிற்கு முன்பாக இயேசு நின்று, "பரத்திலிருந்து உமக்கு கொடுக்கப்படாதிருந்தால் என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இராது!" என முழங்கினார் (யோவான் 19:11). இயேசு கூறியபடியே இதே தைரியமான வார்த்தைகளை நாமும் "நம்மைச் சுற்றியுள்ள முழு உலகத்தையும் இதன் குடியிருப்புகளையும்" பார்த்து கூறிட முடியும்!!
தேவனுடைய திட்டங்கள் அனைத்தும் நம்முடைய நன்மைக்கென்றே வைத்திருக்கிறார். அவருடைய சிட்சையுங்கூட 'நமக்கென்று பரிசுத்தம்' எனத் தோன்றியவற்றில் தேங்கிவிடாதபடி "அவருடைய பரிசுத்தத்தில்" நாம் பங்கடைய வேண்டும் என்பதற்காகவே அவர் அனுமதிக்கிறார் (எபிரேயர் 12:10).
"ஒவ்வொன்றும்" ஆம், ஒவ்வொன்றும் நம்முடைய நன்மைக்கென்றே திட்டம் வகுக்கப்பட்டதாயிருக்கிறது! இதனிமித்தமே இயேசுவின் சீஷனாய் வாழும் ஒருவனுடைய வாழ்க்கையில் கவலையோ அல்லது பயமா தங்கிவிட இடம் இருப்பதில்லை!!
ஜெபம்:
பரலோகப் பிதாவே! உமக்கே அர்ப்பணித்துவிட்ட எங்கள் சீஷத்துவ வாழ்க்கையில், 'சகலத்தையும்' நீரே பொறுப்பேற்றபடியால், யாதொரு சூழ்நிலைகளிலும் நீர் விரும்புவதுபோலவே கவலை இல்லாது வாழ்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments