Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 11

 இன்று "அவருடைய" சத்தம்


மே 11


🔸️ பூமிக்குரிய வாக்குவாதம் இல்லாத ஜீவியம் வேண்டும்! 🔸️


இன்று பூமியில் ஜனங்கள் எதனிமித்தம் வாக்குவாதம் செய்கிறார்கள்? பொதுவாய் "பூமிக்குரியவைகளுக்காகவே" வாக்குவாதம் செய்கிறார்கள். தங்கள் உரிமை, தங்கள் பெயர் பிரஸ்தாபம், சொத்துக்கள்.... ஆகிய பூமிக்குரியவைளைத் தங்களுக்கென சுதந்தரிப்பதற்காகவே வாக்குவாதம் செய்கிறார்கள். உதாரணமாய், சொத்திற்காக வாக்குவாதம் செய்பவர்கள், தங்களுக்கென இவ்வுலகில் அதிகமாக "பூமி வேண்டும்" என்ற குறிக்கோளையே வைத்திருக்கிறார்கள். இதற்காக வழக்கு மன்றங்களுக்கும் ஏறுகிறார்கள். ஆனால் இயேசு கற்பிக்கும் ஆவியின் பிரமாணங்களோ இவ்வழிமுறைக்கு முற்றிலும் முரணாகவே உள்ளது.  


ஆச்சரியமான இந்த வழிமுறை யாதெனில், யாரெல்லாம் தங்கள் உரிமைகளை இழப்பதற்கு விட்டுத்தருகிறார்களோ, யாரெல்லாம் வாக்குவாதம் செய்து போராட மறுத்து நிற்கிறார்களோ ....அவர்களே "பூமியைச் சுதந்தரிப்பார்கள்!" என இயேசு கூறினார் (மத்தேயு 5:5).


தேவன் கிரியை செய்யும் இந்த அற்புத நிகழ்ச்சிக்கு பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், லோத்தின் வாழ்க்கை ஓர் அருமையான பாடமாக இருக்கிறது. 


ஆதியாகமம் 13-ம் அதிகாரத்தில், ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் லோத்தின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஏனெனில் மந்தையை மேய்ப்பதற்கு இருவருக்கும் ஒரே பூமி போதுமானதாக இல்லாதபடியால், அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டது. இச்சூழ்நிலையில், ஆபிரகாம் தன் மருமகனான லோத்திடம் நடந்துகொண்ட விதமோ, ஓர் ஆச்சரியமான சாந்த குணத்தின் வழியாய் இருந்தது. ஆபிரகாம், லோத்தை நோக்கி: "நமக்குள் வாக்குவாதம் வேண்டாம்" எனக்கூறி முழு பூமியையும் லோத்திற்கு முன்பாக வைத்து, அவன் விரும்பிய பூமியைச் சுதந்தரிப்பதற்கு முதல் சந்தர்ப்பத்தை லோத்திற்கே கொடுத்து விட்டான்! இப்படியெல்லாம் ஆபிரகாம் செய்ய வேண்டியது இல்லை. ஏனெனில், உண்மை பூர்வமாக ஆபிரகாமைத்தான் தேவன் கானானுக்கு அழைத்திருந்தார். லோத்தைவிட வயது முதிர்ந்தவரும், அவனுடைய தகப்பனுடைய சகோதரராகவும் இருந்தார். ஆகவே பூமியை சுதந்தரிப்பற்கு தெரிந்து கொள்ள வேண்டிய முதல் சந்தர்ப்பம் ஆபிராமுக்குத்தான் உண்டு. ஆனால் இந்த நல்ல ஆபிரகாம் தன் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார்.  


இவ்வித ஜீவியமே சாந்தகுணமாய் இருப்பதின் பொருளாகும். சகலமும் இழந்து நின்ற ஆபிரகாமிற்கு தேவன் தரிசனமாகி, நான்கு திசைகளையும் பார்க்கும்படி கூறினார்! அவன் கண்ட அத்தனை பூமியும் அவனுக்குச் சுதந்தரம் என கூறிவிட்டார்!! ஆம், சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்!!


ஜெபம்:

அன்புள்ள தகப்பனே! இப்பூமியை பற்றிக்கொண்டு வாழ்ந்த எங்களை மன்னித்து, இம்மண்ணுக்குரியவைகளை இழக்கும் மனதுடைய "சாந்த குணத்தை" எங்களுக்குத் தாரும்! இயேசுவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments