Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 12

 இன்று "அவருடைய" சத்தம்


மே 12


🔸️ தேவ பக்தியான வாழ்க்கை, அதன்மீது தாகம் கொண்டவர்களுக்கே சொந்தம்! 🔸️


யோவான் 7:37-ல் ஒருவன் பரிசுத்தாவியின் நிறைவைப் பெறும்பொருட்டு இயேசு சத்தமிட்டு, "ஒருவன் தாகமாயிருந்தால், என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்" எனக்கூறினார் என வாசிக்கிறோம். ஆம், தாகமில்லாத ஒருவன் இயேசுவினிடத்தில் கிட்டிச்சேரவே முடியாது. ஒருவன் அவரிடத்தில் நெருங்கிச் சேர்ந்திட இவ்வுலகத்தின் எந்த தகுதியும் அவனுக்கு தேவையே இல்லை. ஒருவேளை இவ்வுலகத்தில் நீங்கள் ஒரு மிக அற்பமான கொடிய பாவியாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் இயேசுவிடம் கிட்டிச்சேரும்படி தீராத தாகம் கொண்டிருந்தால், அவரை நீங்கள் கிட்டிச் சேர்ந்து விடுவீர்கள்! 


எதற்குரிய தாகம்? சுகம் வேண்டும், பணம் வேண்டும், பிள்ளைகள் படித்து உயரவேண்டும், பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத்தரம் அமையவேண்டும், நல்ல உத்தியோகம் கிடைக்க வேண்டும்.... போன்ற தாகமா? இது போன்ற உலக காரியங்களுக்காக தாகம் கொண்டவர்கள் இப்பூமியில் ஏராளமாய் இருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து, "என்னிடத்தில் வாருங்கள்!" என இயேசு ஒருக்காலும் அழைப்பதேயில்லை. மாறாக, தன் ஜீவியத்தில் பரிசுத்தத்தையும், நீதியையும் கொண்டுவரும் பரிசுத்தாவியின் வல்லமைக்காய் தாகம் கொண்டவர்களையே இயேசு அழைத்தார். இவ்வாறு, இன்று எத்தனை பேர் ஒரு நேர்மையான நீதியுள்ள வாழ்க்கைக்கு தாகம் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் தன் வருமான வரியை நேர்மையாக கட்ட வேண்டுமென தாகம் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் எந்த மனிதரிடத்திலும் கடன்படாத ஜீவியத்திற்காய் தாகம் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் பண விஷயத்தில் நூற்றுக்கு நூறு நேர்மையாய் இருக்க வேண்டுமென தாகம் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் பேச்சினாலோ அல்லது செயலினாலோ ஒருவருக்குக்கூட தீங்கு செய்யக்கூடாதென தாகம் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறெல்லாம் ஒரு மனிதனுடைய ஜீவியத்தில் பசிதாகம் ஏற்பட்டுவிட்டால் அவன் பாக்கியவான்! அவன் நிச்சயமாய் திருப்தி அடைவான் (மத்தேயு 5:6).


நாம் தேவநீதியை அடைவதற்கு இந்த வசனமே பரலோக ராஜ்யத்தின் சூத்திரமாகும்! ஓர் நேர் விகிதாச்சாரத்தைப்போல, நாம் எவ்வளவு தாகம் கொண்டிருக்கிறோமோ, அந்த அளவு மாத்திரமே தேவ நீதியையும் சுதந்தரித்திட முடியும். ஆகவே நீங்கள் எவ்வளவு பரிசுத்தமாய் வாழ்கிறீர்கள்? என்ற கேள்விக்குரிய விடை, பரிசுத்த ஜீவியத்திற்கு நீங்கள் எவ்வளவு தாகம் கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்வியைப் பொருத்ததேயாகும்! 


ஜெபம்:

பரம பிதாவே! எல்லா மானிடர்களைப்போல் இப்பூமிக்குரிய தாகத்தில் மாய்ந்துவிடாமல், உமது பரிசுத்தத்திலும், நீதியிலும், பசிதாகம் கொண்டு "திருப்தி" அடைந்திட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments