இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 12
🔸️ யாவரும் நம்மை நெருங்கி வரும்படியான ஐக்கியமே நமக்கு வேண்டும்! 🔸️
யோபு 33:7 கூறுகையில், "இதோ நீர் எனக்குப் பயப்பட்டு கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்க மாட்டாது" என நேர்த்தியாய் கூறுவதை பாருங்கள். இயேசுவைக் குறித்து தவறான கண்ணோட்டத்தையே நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவர் எப்போதுமே தன் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டவரல்ல! அவ்வாறெல்லாம் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதை, நான் பரிசுத்தம் என்றும் கருதுவதில்லை! நான் சந்தித்த சில 'பரிசுத்த ஜனங்களிடம்' விடுதலையாய் பேசவோ அல்லது அவர்களை நெருங்கக்கூட முடியாதிருந்ததை நான் கண்டிருக்கிறேன். நானோ ஆண்டவரிடம் "ஆண்டவரே இது போன்ற இழி மனிதனாய் நான் வாழ விரும்பவில்லை! என்னோடிருப்பவர்கள், என்னிடம் அவர்கள் பேசுவதெல்லாம் அல்லது தாங்கள் செய்வதெல்லாம் 'சரியாய்தான் இருக்குமோ' என்ற அச்சத்தோடு என்னிடம் பழகிவிடக்கூடாது. மாறாக, அவர்கள் எதையும் விடுதலையோடு என்னிடம் பேசவும் செய்திடவும் வேண்டும்" என்றே ஜெபிக்கிறேன்.
ஒரு அரேபிய பழமொழி கூறிடும் வாசகத்தைப் பாருங்கள்: "ஒருவன் தன் சகோதரனிடம் யாதொரு தடையுமின்றி, தான் பேச விரும்பியதையெல்லாம் "கலகலவென" கூறிச் சென்றவுடன், அந்த சகோதரனோ பேசிய வார்த்தைகளில் உள்ள 'பதர்களை களைந்து போட்டுவிட்டு' மிக மகிழ்ச்சியுடன் கோதுமை மணிகளை மாத்திரமே வைத்துக்கொள்வார் என்றால், அதுவே நட்பின் இலக்கணமாகும்!" என்றே நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. அந்த அளவிற்கு நாம் ஜனங்களுக்கு அன்புள்ள சுயாதீனம் கொடுத்திருக்கிறோமா? அல்லது உங்களிடம் பேசுகிறவர்கள் எங்கே சில 'பதர்கள்' தோன்றிவிடுமோ என்றும், அதனிமித்தம் பிரச்சனை வந்துவிடுமோ என்றும் பயப்படுகிறார்களா? தன் மனைவியோடு நல்ல ஐக்கியமாய் வாழ்கிறவன் என்ன பேசினாலும், அதை அவன் மனைவி சரியாகவே புரிந்து கொள்வாள். அதற்குப் பெயர்தான் சகோதரத்துவம்! நாம் அனைவரும் இப்படிப்பட்ட ஐக்கியத்தில்தான் இருக்க வேண்டும். ஐக்கியமில்லா பரிசுத்தம் போலியான பரிசுத்தமே ஆகும்! உண்மையான பரிசுத்தம் எப்போதும் ஆழமான ஐக்கியத்தையே ஒருவருக்கொருவரில் கொண்டுவரும்!!
ஜெபம்:
பரம தந்தையே! ஆண்டவர் இயேசு பாவிகளுக்கு நண்பராய் இருந்ததுபோல, யாராயிருந்தாலும் எங்களிடம் நெருங்கிவரச் செய்திடும்; இயேசுவின் அன்பின் சினேக வாழ்க்கை தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments