இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 13
🔸️ பரிசுத்தமுள்ளவர்களாயும், பட்சமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்! 🔸️
எபேசியர் 4:24 கூறும் மெய்யான பரிசுத்தத்தைப் பெற்றிருந்த ஒரு சகோதரனைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். அவர் மிகுந்த அறிவும், புத்திக்கூர்மையும் கொண்டவர். அவர் காரியங்கள் எல்லாவற்றிலும் தூய்மையாகவும் நல்ல சீராகவும் மிகுந்த ஒழுக்கத்தோடும் செய்வார். ஆனால் தேவனுடைய அளவில்லாத ஞானத்தின்படி, எந்த ஒழுங்கையும் தன் வாழ்வில் கற்றுக் கொள்ளாத ஒரு மனைவியை இந்த சகோதரன் திருமணம் செய்தார். 'அதுவே' அவர்கள் இருவருக்கும் இரட்சிப்பாய் இருந்தது! இதுபோன்ற திருமணமே "தேவனால் நியமனம் செய்யப்பட்டது" என்பதை உறுதியுடன் ஊர்ஜிதப்படுத்துவதாய் இருந்தது! ஏனென்றால், நம்முடைய பரிசுத்தமாகுதலில் தேவன் ஆர்வம் கொண்டிருக்கிறாரே அல்லாமல், அதைவிட அதிக அக்கறையாய் வீட்டில் உள்ளவைகள் சுத்தமாயும் ஒழுங்காயும் இருக்கிறதா? என காண தேவன் ஆர்வம் கொள்வதில்லை!
சுத்தமும் ஒழுங்குமிக்க ஒரு வீடு நல்லதுதான்! ஆனால், அதுவெல்லாம் தேவனுக்கு இரண்டாவது ஸ்தானமேயாகும். அதிக முக்கியமான முதல் ஸ்தானமாக இருப்பதெல்லாம் "பரிசுத்தமாகுதலின்" ஜீவியம் மாத்திரமே ஆகும். இந்த அருமையான ஞானத்தை அந்த பரிசுத்தவான் பெற்றிருந்தார்.
இந்த சகோதரன், சமையலறையில் பயன்படுத்திய சாப்பாட்டு பிளேட்டை அதற்குரிய அறையிலும், டம்ளர்களை அதற்குரிய அறையிலும், ஸ்பூன்களை அதற்குரிய அறையிலும் ஒழுங்காகவும், வரிசையாகவும் அடுக்கி வைப்பார். ஆனால், திருமணமாகி வந்த அவரது மனைவியோ எல்லா பாத்திரங்களையும் குழப்பி தாறுமாறாய் வைத்துவிடுவார்!! இந்த சகோதரனுக்கோ இவ்வித நிலை முற்றிலும் விகாரமானதாகும். ஆகிலும், அவர் என்ன செய்தார் தெரியுமா? மனைவிக்கு சமையலறையில் உதவி செய்யும் அவர், தன் மனைவியைப் போலவே தானும் அவ்வாறே பாத்திரங்களை தாறுமாறாய் ஒழுங்கற்று வைத்து செல்வார்!! ஏன் அவ்வாறு செய்தார்? தன்னோடிருக்கும் மனைவி, அவள் தன்னைத்தானே ஒருக்காலும் மனம் மடிந்த நோக்கத்தோடு பார்த்து விடக்கூடாது என்ற காரணமே ஆகும். உண்மையிலேயே அவர் மகா ஞானமுள்ள மனிதர்! அவரின் சமையலறை ஒழுங்கு இல்லாமல் இருக்கலாம்... ஆனால் தம்பதியர்களோ மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்!!
உங்களுக்கு எது வேண்டும்? மிக ஒழுங்கான சமையலறையும், அதோடு சேர்த்து சண்டையும் வேண்டுமா? அல்லது ஒழுங்கற்ற சமையலறையும் அதன் மூலம் அந்த சமாதானமும் வேண்டுமா? சமையலறையை மறந்துவிடுங்கள். சகோதரனே! நீங்கள் மனைவியோடு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும், அவ்வளவுதான்!
அன்பான சகோதர சகோதரிகளே! சற்று ஞானமுள்ளவர்களாக வாழ முயற்சியுங்கள்!! அதுவே மேலானது.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே! பரிசுத்தம் என்ற பெயரில் அன்பையும், பட்சமாய் நடப்பதையும் இழந்து விடாதிருக்க உதவி புரிந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments