இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 19
🔸️ 'தேவனுக்கு நண்பர்களே' பிறரிடம் மன்னிப்பு கேட்பர்! 🔸️
நாம் முற்றிலுமாய் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய சிந்தையாய் இருக்கிறது. ஆனால், நாம் தேவனுடைய வார்த்தையில் ஓர் உயிருள்ள விசுவாசம் பெற்று அவைகளுக்கு கீழ்ப்படியும்போது மாத்திரமே நமக்குள் இம்மகா இரட்சிப்பின் கிரியை துவங்குகிறது. உதாரணமாய், இன்று எத்தனை பேர் தங்களைத் தாங்களே தாழ்த்துவதற்கு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என எண்ணுகிறீர்கள்? (லூக்கா 18:14).
இன்று ஜனங்கள் எந்த மனிதரிடத்திலாகிலும் எந்தக் காரியத்திற்காகிலும் மன்னிப்பு கேட்டதுண்டா என்றால், கிட்டத்தட்ட ஒருவருமே இல்லை என கூறலாம். பிறரிடம் மன்னிப்பு கேட்டால் தாங்கள் பிறரால் குறைவாக மதிப்பிடப்படுவோம் என்றே சிந்திக்கிறார்கள். உங்கள் பாவத்தை நீங்கள் பிறரிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்கும்போது நீங்கள் குறைவாய் மதிப்பிடப்படுவீர்கள் என்பது உண்மைதான்... இருப்பினும், அவ்வித மதிப்பிடுபவர்கள் இம்மைக்குரிய ஜனங்களே ஆவர்! இவ்வித இம்மைக்குரிய ஜனங்களால் நீங்கள் குறைவாய் மதிப்பிடப்படும்போது, தேவனுடைய பார்வையில் உயர்வாய் எண்ணப்படுவீர்கள் என்பதோ அதிக நிச்சயம்!! ஆனால், இந்த ஒப்பற்ற சிந்தை இன்று ஜனங்களிடத்தில் இல்லையே! உண்மையை அப்படியே ஒத்துக்கொண்டு உங்களை நீங்கள் தாழ்த்தும் போது, தேவனுக்குரிய மேன்மையில் நீங்கள் உயருவீர்கள் என்பது 'பளிச்சென' தோன்றும் வெளிப்படையான உண்மையாய் இருக்கிறது. எனவே, மதியீனமான ஜனங்கள் உங்களை கனவீனப் படுத்துவதை மறந்துவிடுங்கள்! ஏனென்றால், நீங்கள் தேவனால் கனப்படுத்தப்படுகிறீர்கள்!! நமக்குத் தேவையாய் இருப்பதெல்லாம் அது ஒன்றுதானே....! தேவனோடு "நல்ல நண்பனாய்" மாறுவதற்கே நீங்கள் இப்போது கிரியை நடப்பித்திருக்கிறீர்கள்.
"தாழ்மையே" ஆவிக்குரிய செழித்த வாழ்விற்கு நல்ல நிலமாய் உள்ளது! இந்த நிலத்தில் வளர்ந்திடும் ஆவிக்குரிய வளர்ச்சியே "ஆவிக்குரிய கனியை" மிகுதியாய் தந்திட முடியும்.
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்களை தாழ்த்தி பிறரிடம் மன்னிப்பு கேட்கும் தாழ்மையின் சிந்தையை எங்களுக்குத் தாரும்! மனுஷருக்கு முன்பாக அல்ல, உமக்கு நண்பர்களாய் இருக்கும் பாக்கியமே எங்களின் மேன்மை! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments