Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 29

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 29


🔸️ அன்றாட ஜீவியத்தில் தேவனோடு சேர்ந்து வாழ வேண்டும்! 🔸️


உங்கள் வீட்டின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுந்து உங்கள் வீட்டு ஜன்னல் வழியாய் வெளியே பார்க்கிறீர்கள். அங்கே வீதியிலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உங்கள் இல்லத்திற்கு வருவதைக் கண்டுவிட்டீர்கள்! இப்போது உங்கள் நடவடிக்கைகள் என்னவாயிருக்கும்? இச்சமயம் நீங்கள் துரிதமாய் செய்திடும் நடவடிக்கையே, தேவனுடைய ராஜ்யம் இப்பூமியில் வருவதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ளும் ஒரு நல்ல பரீட்சையாகும். 


நீங்கள் இயேசுவைக் கண்ட மாத்திரத்தில், உங்கள் புத்தக அலமாரியில் உள்ள சில புத்தகங்களை இயேசு கண்டுவிடாதபடி அவைகளை மிகுந்த பதட்டத்தோடு மறைக்க வேண்டியதுள்ளதா? ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில் 'கேபிள்-டெலிவிஷன்' வைத்திருப்பீர்களென்றால், அதையும் விரைந்து சென்று மறைக்க வேண்டியிருக்கும்! நடந்து வந்த ஆண்டவர் இயேசு இப்போது வீட்டிற்குள் பிரவேசித்து அமருகிறார். இப்போது நீங்கள் வழக்கமாய் சாப்பாட்டு மேஜையை சுற்றி உட்கார்ந்துகொண்டு புறங்கூறும் வம்பான கதைகளையெல்லாம் ஒரு துளிகூட சம்பாஷித்துவிடமாட்டீர்கள்! இவ்வாறு ஆண்டவர் இயேசு உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் வரை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோடும், வேலை செய்பவர்களோடும், உங்கள் வழக்கமான சம்பாஷனைகளில் தொனிக்கும் கடுமையான வாசகங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு அவர்களிடம் 'அன்பாகவும்' 'மரியாதையாகவும்' நடந்துகொள்ள விசேஷ கவனம் எடுக்க வேண்டியுள்ளதா? மேலும், இயேசு உங்கள் வீட்டில் அமர்ந்திருக்கும்போது, உங்கள் எல்லா நண்பர்களும் வந்து இயேசுவை சந்தித்து பேசுவதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய முடிகின்றதா? அல்லது இயேசு உங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது குறிப்பிட்ட ஒரு சில நண்பர்கள் உங்களைச் சந்திக்க உங்கள் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற அங்கலாய்ப்பில் உள்ளீர்களா? 


இன்று போலவே இயேசு உங்கள் வீட்டில் சதா காலமாய் தங்கி இருந்தால் நீங்கள் பேரானந்தம் கொள்ள முடியுமா? அல்லது, அவர் உங்கள் இல்லத்தை விட்டுச் சென்றவுடன்.... 'அப்பாடா! நல்லவேளை போய்விட்டார்!!' என பெருமூச்சு விடுகிறீர்களா? 


இந்நிகழ்ச்சிக்கு உங்கள் நெஞ்சைத் தொட்டு நேர்மையாய் பதில் கூறுங்கள்! நம் வீட்டில் ஏதோ சில நாட்கள் மாத்திரம் அவர் தங்கியிருப்பதை மிகுந்த பாரமாக எடுப்போமென்றால், நித்தியத்தில் அவரோட சதா காலமும் எவ்வாறு வாழமுடியும்?   


ஜெபம்:

பரம தகப்பனே! எங்களின் அன்றாட ஜீவியத்தில் உம்மோடு சேர்ந்து வாழ பிரியம் இல்லாமல் 'நித்தியத்தில்' உம்மோடு வாழ்வது எப்படி? உம்மோடு சேர்ந்து வாழும் தெய்வ பயமுள்ள வாழ்வை இன்று எங்களுக்கு கற்றுத்தரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments