Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 30

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 30


🔸️ முதன்மையானதை தேவனுக்கு மனப்பூர்வமாய் தரவேண்டும்! 🔸️


ஒரு சமயம், ஒரு விவசாயி தன் மனைவியைப் பார்த்து, "நம் வீட்டுப் பசு, இரண்டு குட்டிகள் போட்டிருக்கிறதே! அவைகளில் ஒரு கன்றுக்குட்டி வெள்ளையாகவும், இன்னொரு கன்றுக்குட்டி பிரவுன்(brown) நிறமாகவும் உள்ளது. இவைகள் வளர்ந்தவுடன் ஏதாவது ஒரு கன்றுக்குட்டியை நம் ஆண்டவருக்கு கொடுக்கலாம்!" எனக் கூறினான். உடனே அவனுடைய மனைவி, "நீங்கள் பிரவுன் நிற கன்றுக்குட்டியையா அல்லது வெள்ளை நிற கன்றுகுட்டியையா, எதை ஆண்டவருக்கு தரப் போகிறீர்கள்?" என கேட்டாள். அதற்கு அந்த விவசாயி, "இக்கன்றுக்குட்டிகள் வளர்ந்தபின்பு அதைக்குறித்து முடிவு செய்வோம்" என பதில் கூறிவிட்டான். அதேபோல இரண்டு கன்று குட்டிகளும் கொழு கொழு என்று வளர்ந்து விட்டன.   


ஒரு நாள் மிகுந்த வருத்தமான முகத்தோடு விவசாயி தன் வீட்டிற்கு திரும்பி வந்தான். அவன் தன் மனைவியைப் பார்த்து, "ஒரு துக்கமான செய்தி.... 'ஆண்டவருடைய' பிரவுன் கன்றுக்குட்டி செத்துவிட்டது!!" எனக் கூறினான். உடனே அவன் மனைவி தன் கண்களை அகல விரித்து, "நாம்தான் எது ஆண்டவருடைய கன்றுக்குட்டி என முடிவு செய்யவில்லையே? அப்படியிருக்க, இறந்த பிரவுன் நிற கன்றுக்குட்டிதான் ஆண்டவருடைய கன்றுக்குட்டி என எப்படி அறிந்தீர்கள்?" என ஆச்சரியத்துடன் வினவினாள். அதற்கு அந்த விவசாயி சற்றும் தாமதியாமல், "அடடா, உனக்குத் தெரியாதா? என் மனதில் பிரவுன் நிறக் கன்றுக்குட்டியைத்தான் ஆண்டவருக்குத் தர வேண்டுமென நான் முன்பே எண்ணியிருந்தேன். இப்போது 'சரியாக' அந்தக் கன்றுகுட்டிதான் இன்று காலையில் செத்துவிட்டது!" என துணிந்து பதில் கூறினான். 


இன்று இப்படித்தான் அநேக விசுவாசிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதுமே, சாகும் கன்றுக்குட்டிதான்... ஆண்டவருடைய கன்றுக்குட்டி! இவ்விதமாய், இவர்கள் "தேவனிடத்தில் ஐசுவரியவானாய் இராதபடியால்" தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆவிக்குரிய தரித்திரத்திலேயே தேங்கித் தங்கிவிடுகிறார்கள் (லூக்.12:21).     


இன்று உங்கள் ஜீவியத்தின் நிலை என்ன? நீங்கள் தேவனுக்கு மிக அருமையானதைக் கொடுக்காததற்கு எப்போதும் ஏதேனும் சில காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ? அப்படியானால், உங்கள் இருதயம் எங்கிருக்கிறது என்பதையே உங்களின் நிலை தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் முதன்மையான பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்களின் இருதயமும் இருக்கும்! (மத்தேயு 6:21).


ஜெபம்:

பரம பிதாவே! எங்கள் வாழ்வில், உமக்கே "முதன்மையானதை" தந்து உள்ளத்தில் பரலோக பொக்கிஷம் பெற்றிட எங்களுக்கு தயை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments