இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 1
🔸️ இம்மண்ணுக்குரிய ஜீவியத்தில் கவலை இல்லாமல் வாழவேண்டும்! 🔸️
நம்முடைய எல்லா விருப்பங்களையும் இப்பூமிக்குரியவைகளிலிருந்து விலக்கி பரலோகத்தில் வைத்து விட்டால், நாம் கவலை கொள்வதென்பது ஒருக்காலத்தும் நிகழாத ஒன்றாய் மாறிவிடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
ஆகாரத்திற்காக கவலை கொள்ள வேண்டாம் என்றும், "ஆகாரத்தைப் பார்க்கிலும் "ஜீவன்" விசேஷத்தவை அல்லவா?" (மத்தேயு 6:25) என்றும் ஆண்டவராகிய இயேசு வினவினார். உங்களுக்குத் தாழ்மையின் "ஜீவியம்" வேண்டுமா? அல்லது கொழுத்த உணவுப் பதார்த்தங்கள் வேண்டுமா? இன்று ஜனங்கள் தங்கள் ஜீவியத்தில் கிறிஸ்துவைப்போல மறுரூபமாக வேண்டும் என்ற "ஜீவிய" ஆர்வத்தைக் காட்டிலும் உணவின்மீதே அதிக நாட்டம் கொள்கிறார்கள். கிறிஸ்துவைப் போன்று வாழும் ஜீவியத்தைக் காட்டிலும் உணவா விசேஷித்தவைகள்? நிச்சயமாக இல்லை!
மேலும், என்னத்தை உடுப்போம் என்றும் கவலைப்படாதிருங்கள். "உடையைத் பார்க்கிலும் 'சரீரம்' விசேஷித்தவை அல்லவா?" என இயேசு வினவினார். தேவசித்தம் செய்வதற்கென நம் சரீரத்திற்கு நல்ல சுகத்தை தேவன் நமக்குத் தருவார். இவ்வாறு தேவ சித்தத்திற்காக வாழும் சரீரத்தைக்காட்டிலும், உடை முக்கியமல்ல. ஆனால், இன்றோ ஜனங்கள் உடையின்மீதே கவலை கொள்கிறார்கள். உடுத்துவதற்கு இல்லை என்பதற்காக அல்ல, அன்றன்றைக்குரிய "பேஷன்"படி (Fashion) உடுத்த வேண்டுமே என்ற விருப்பமே இவர்களுக்குக் கவலையாக மாறுகிறது. இவ்வாறெல்லாம் இவர்கள் விரும்புவதற்கு காரணம் என்ன? தேவனை மகிமைப்படுத்துவதற்கு அல்ல, ஜனங்களை கவர்ச்சிப்பதற்கே ஆகும்.
நாமோ நம் சரீர சுகத்தைப் பாதிக்கும் தீய பழக்கங்களின்மீதே கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில், இந்த சரீர வாழ்க்கையின் மூலமாய் நாம் அதிகமான திவ்வியசுபாவம் பெற்று தேவனை மகிமைப்படுத்த அல்லவோ விரும்புகிறோம். காரியம் இவ்வாறு இருப்பது நிமித்தமே, ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையை பார்க்கிலும் சரீரமும் நமக்கு விசேஷித்தவைகளாய் இருக்கிறது!
நம்முடைய உணவும், உடையும் எளிமையாய் இருப்பதே சாலச் சிறந்தது ஆகும். தேவனுடைய மகிமையே அல்லாமல், உணவின்மீதும், உடையின்மீதும் நமக்கு விசேஷித்த நாட்டம் ஏதுமில்லை என்ற பாக்கியமான இடத்தையே நாம் யாவரும் அடைந்திடவேண்டும்!
ஜெபம்:
அன்பின் தந்தையே! உடலைவிட, உணவைவிட... இந்த சரீர மண்ணின் வாழ்வைவிட மேலான வாழ்வின் நாட்டமே எங்கள் உள்ளம் நிறையட்டும்! உலக கவலை ஒழியட்டும்! அருள் செய்வீராக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:- https://t.me/hisvoicetoday
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
Google Drive • Ebook • Download Now:
https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA
0 Comments