இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 2
🔸️ ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபம் வேண்டும்! 🔸️
பிலிப்பியர் 4:6-ம் வசனத்தில், "நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல்.... என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளையை மீண்டுமாய் வலியுறுத்தி பவுல் கூறினார். ஒன்றுக்கும் கவலைப்படாமல் என்ற வாக்கியத்தின் பொருள் "ஒன்றுக்கும் கவலைப்படாமல்" என்பதே ஆகும். அப்படியானால், நம்மை நாள்தோறும் சந்திக்கும் கஷ்டங்களையும், சோதனைகளையும் எவ்வாறு கையாளுவது? சில பிரச்சனைகள் நம்மை கவலைகொள்வதற்கு தூண்டுவதாககூட இருக்கிறதே? நாளை அல்லது அடுத்த வாரம் என்னுடைய பிள்ளைகளுக்கோ அல்லது குடும்பத்திற்கோ சம்பந்தப்பட்ட காரியங்கள் என்னை கவலைகொள்ள தூண்டுகிறதே! இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு விடையை பவுல் அதே வசனத்தில் உடனடியாக கூறினார். ஆம், நாம் உடனே ஜெபிப்பதே அந்த விடையாகும்! அதாவது, பொதுவான ஜெபம் மாத்திரமல்லாமல், "உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலிப்பியர் 4:6) என பவுல் புத்தி கூறினார்.
விண்ணப்பங்கள் என்பதற்குப் பொருள், நாம் குறிப்பாக வலியுறுத்திக் கூறும் தேவைகளே ஆகும். அவ்வாறு தேவனுக்குத் தெரியப்படுத்தும்பொழுது "ஸ்தோத்திரத்தோடே" அல்லது "நன்றி செலுத்தி" தெரியப்படுத்த வேண்டும் என கூறினார். அதாவது ஒரு விண்ணப்பப்படிவத்தை பரமபிதாவுக்கு எழுதி, (நம்மை கவலை கொள்ளத் தூண்டும் பிரச்சனைகளை எழுதி) அதை அவரிடம் சமர்ப்பிக்கிறோம். அவ்விண்ணப்பப்படிவத்தை நம் பரம தகப்பன் வாங்கியவுடன், அவர் அவ்வாறு வாங்கியதற்காக "நன்றி" என நாம் கூறுகிறோம். இவ்வாறு ஸ்தோத்திரம் அல்லது நன்றி சொல்வதே விசுவாசத்தின் மாறாத அடையாளமாகும். என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தேவன் ஆவன காரியத்தை நிச்சயமாய் செய்வார் என்ற உறுதியான விசுவாசம்!
பவுல் புத்தி கூறியபடியே நீங்கள் செய்து விட்டால், "எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்" என அவர் உறுதிபட கூறினார்.
ஜெபம்:
பரம பிதாவே! எந்த நிலையிலும் உம்மிடம் நெருங்கி ஸ்தோத்திரத்தோடே விண்ணப்பம் செய்து சமாதானம் பெற்றிடும் விசுவாசத்தை எங்களுக்கு தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments