இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 4
🔸️ உன்னதங்களில் உயர்த்தப்பட்டவரை நம் கண்கள் காண வேண்டும்! 🔸️
தீர்க்கதரிசி எலியா உயிருடன் "பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட "நிகழ்ச்சியை 2 இராஜா. 2:1-22 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். அவன் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, அவனுடைய ஊழியத்தை எலிசா ஏற்றுக்கொள்வான் என தேவன் எலியாவிடம் முன்கூட்டியே கூறியிருந்தார். இதற்கு ஒப்பாகவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலிருந்து "பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும்" தான் மேற்கொண்ட ஊழியப் பணியை தன் சீஷர்களிடத்தில் ஒப்படைத்துச் சென்றார்! எலிசா எவ்வாறு எலியாவின் ஆவியைப் பெற்றானோ, அதேபோல் சீஷர்களும் கிறிஸ்துவின் ஆவியை பெந்தகொஸ்தே நாளில் பெற்றார்கள் என அப்போஸ்தலர் 1:1-9 வசனங்களில் நாம் காண்பது எத்தனை பரவசமாயிருக்கிறது!!
தீர்க்கதரிசியின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து "கர்த்தர் இந்நாளில் உன் எஜமானாகிய எலியாவை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார்" என கூறினார்கள் (2 இராஜா. 2:3,5). ஆனால் எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பின்போ, "அவர் மெய்யாகவே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்!" என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை! அதற்கு பதிலாக, இந்த பூமியிலேயே அங்கும் இங்கும் அவரை தேடினார்கள். இதைப்போலவே, இன்றும் திரளான கிறிஸ்தவர்கள் "எங்கள் ஆண்டவர் பரலோகத்தில் இருக்கிறார்!" என்றே கூறுகிறார்கள். ஆனால், அண்டசராசர சர்வ சிருஷ்டிப்பிற்கும் மேலாக ஆண்டவர் இயேசு உயர்த்தப்பட்டு இருக்கிறார் என்ற உண்மையை இவர்களின் கண்கள் 'நிஜமாய்' காணவில்லை!! எலிசாவைப் பார்த்து "நான் உன்னைவிட்டு பரத்திற்கு மேலாக எடுத்துக்கொள்ளப்படுகையில், என்னை நீ கண்டால் மாத்திரமே என்னுடைய ஆவியின் இரட்டிப்பான வரம் உனக்கு கிடைக்கும்!" என்று எலியா கூறியிருந்தார்.
ஆம், சர்வ சிருஷ்டிப்பிற்கும் மேலாக ஆண்டவர் இயேசு உயர்த்தப்பட்டு இருப்பதை நம் விசுவாசக் கண்களால் கண்டால் மாத்திரமே, நாமும் ஆவியின் நிறைவை பெற்றுக்கொள்ள முடியும்!
இவ்வாறாக, கிறிஸ்து வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டதை எபேசுவின் விசுவாசிகள் தங்கள் மனக்கண்களால் காண வேண்டும் என்றே அவர்களுக்காக ஜெபித்தார் (எபே.1:18-23).
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே! மரித்து, உயிர்த்து, உன்னதங்களில் உயர்த்தப்பட்ட ஆண்டவர் இயேசுவின் "சர்வ வல்லமையை" நாங்கள் நிஜமாய் கண்டு, ஆவியின் வல்லமையை நாங்களும் பெற்றிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments