Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 12

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 12


🔸️ பெலன் கொண்ட கிறிஸ்தவன் 'சொகுசு வாழ்விற்கு' தூரமானவன்! 🔸️


"அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்" என்று கர்த்தர் தன் தாசனுக்கு நேரடியாகக் கூறிய இந்த அற்புத வசனத்தைப் பாருங்கள்! (எரேமியா 1:19).


மேற்கண்ட வசனத்திலிருந்து, "ஆண்டவருடைய சீஷர்களுக்கு" மூன்று நிகழ்ச்சிகள் நிச்சயமாய் நிகழும் என்பதை நாம் காணமுடிகிறது. 1)சாத்தானும் அவனுடைய கைக்கூலிகளும் நமக்கு விரோதமாய் யுத்தம் செய்வார்கள். 2)அவர்கள் நம்மை மேற்கொள்ள மாட்டார்கள். 3)நம்மை விடுவிக்கும்படி ஆண்டவர் நம்மோடு எப்போதும் இருப்பார்!


நாம் இந்த உலகத்தில் இருக்குமட்டும் உபத்திரவங்களையும், துன்புறுத்தப்படுவதையும், பரீட்சைகளையும் நிச்சயமாய் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இவைகளை சந்திக்காமல் ஒருபோதும் நம்மை தவிர்த்துக்கொள்ளவே முடியாது. ஆகவே, இனிவரும் நாட்களில் நம்முடைய பணி ஸ்தலத்திலோ, நம் சொந்த ஜீவியத்திலோ.... ஓர் இலகுவான வாழ்க்கையை நாம் எதிர்பார்க்க முடியாது!


அதேபோல், பொருளாதார நெருக்கடிகளும் நம் யாவருக்குமே ஏற்படக்கூடும். ஆகவே, இப்போதிருந்தே ஓர் எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் யாவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இனிவரும் எதிர்காலத்தில் "சொகுசாய் வாழ்பவர்கள்" கண்டிப்பாக அனேக கஷ்டங்களுக்கு ஆளாவார்கள். மேலும், நாம் பிறரை சார்ந்து கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடாதபடி, வருங்காலத்திற்காக நம்மால் முடிந்த அளவு கொஞ்சம் பணத்தை சேமித்து வைப்பதற்கும் நாம் ஞானம் உள்ளவர்களாய் இருந்திட வேண்டும். அப்படியிருந்தும், 'நம்முடைய சேமிப்புகளை' நாம் ஒருபோதும் சார்ந்து கொள்ளவே கூடாது. நம் முழு நம்பிக்கையையும் ஆண்டவர்மீது மாத்திரமே வைத்திருக்க வேண்டும்.


நம் தேவன், நம்மீது வைராக்கிய வாஞ்சை கொண்டவராய் இருக்கிறபடியால், சிருஷ்டிக்கப்பட்ட பொருட்கள் மீது நம்முடைய நம்பிக்கையை நாம் வைத்திட ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இன்றைய உலகத்தின் பொருளாதாரத் தூணை தேவன் வெகு சீக்கிரத்தில் அசைக்கப் போகிறார்! அச்சமயத்தில், யாரெல்லாம் சிருஷ்டிக்கப்பட்ட பொருட்கள்மீது தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் முற்றிலுமாய் நிலைகுலைந்து போவார்கள்!! நாமோ பெலன் கொண்ட கிறிஸ்தவர்களாய் வாழவே தேவன் விரும்புகிறார். 


 ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! எங்களை பெலன் கொண்டவர்களாய் மாற்றும்படி அனுமதிக்கும் துன்பங்களுக்கு, 'சொகுசு' எதிர்பாராமல் அர்ப்பணிக்கிறோம்! ஏற்று நடத்தும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 



 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments