இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 15
🔸️ எக்காலத்தும் துணை நிற்கும் தேவன்! 🔸️
மருத்துவர் உங்கள் நலனைக் குறித்த துர்ச்செய்தியைக் கூறியபடியால் நீங்கள் அழுகிறீர்களோ? நீங்கள் ஏன் ஆண்டவர் இயேசுவிடம் கதறி கூப்பிடக்கூடாது? கொடிய வேதனைகளையும் அவர் தாங்கி இருக்கிறபடியால் நீங்களும் தாங்கிக்கொள்ளும்படி உங்களுக்கு அவர் அருள் செய்திட முடியுமே! உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், ஒவ்வொரு சோதனையையும் தாங்கும்படியான கிருபையையும் பெலனையும் அவர் உங்களுக்குத் தந்தருளுவார்!! இந்தப் பூமியில் உள்ள வேதனைகள் யாவும் "இனி வேதனையும் அல்லது வருத்தமும் இல்லாத ஒரு சிறந்த ஸ்தலத்தை" நாம் எதிர்நோக்கி இருக்கும்படியே நம்மைத் தூண்டுகிறது!
எங்கள் நாட்களில் அடிக்கடி பாடும் ஒரு பல்லவி உண்டு:
"கர்த்தர் சமூகம் என்றும் சந்தோஷமே
கண்ணீரும் கவலையும் அகன்றேபோம்
கர்த்தர் சமூகம் என்றும் சந்தோஷமே!"
தொடர்ந்து வரும் அந்த பல்லவியில்,
"கர்த்தர் சமூகம் என்றும் சமாதானமே", "கர்த்தர் சமூகம் என்றும் வல்லமையே", "கர்த்தர் சமூகம் என்றும் ஜெயமே" என இனிமையாய் கூறப்பட்டிருக்கும். பாடுவதில்தான் எத்தனை ஆறுதல் அளிக்கும் வல்லமை அடங்கியிருக்கிறது! அதுவும், வேதனையிலும், துன்ப சூழ்நிலைகளிலும் பாடிடும் பாடல் மிகுந்த ஆறுதலை நமக்குத் தருகிறது!!
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் ஆண்டவருக்கு முழுமையாய் அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தால், சரீர வேதனை உங்களுக்கு வரும்போது, அது உங்களுக்கு சற்றே இலகுவாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். கடந்த நாட்களில் ஒரு தலைவலியைகூட உங்களால் தாங்க முடியாததாய் இருந்திருக்கக்கூடும். ஆனால் இப்போதோ, உங்கள் உயிருக்கே ஆபத்தான வியாதி வந்தாலும், நீங்கள் அதற்காக ஜெபித்து.... பின்பு கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருந்திட முடியும்! "நாம் தண்ணீர்களைக் கடக்கும் வேளையில் அது நம்மேல் புரளுவதில்லை" என்றும் அவர் உறுதி அளித்து வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இந்த வசனங்களை Living Bible மொழி பெயர்ப்பு நேர்த்தியாகக் கூறுகிறது:
"ஆழமான தண்ணீர்களின் கொடிய துன்பங்கள் மத்தியில் நான் உன்னோடேயிருப்பேன்; கஷ்டத்தின் ஆறுகளை நீ கடந்து செல்லும்போது நீ மூழ்கிப் போகமாட்டாய்! நெருக்கத்தின் அக்கினியில் நடந்து செல்லும்போது நீ எரிந்து போகமாட்டாய்! அக்கினி ஜுவாலைகள் உன்னைத் தீண்டாது! நீ பயப்படாதே! நான் உன்னோடே இருக்கிறேன்!" (ஏசாயா 43:2,5).
ஜெபம்:
எங்கள் அன்பின் தந்தையே! உம்முடைய நீங்காத துணையும், உம்மீது கொண்ட மகிழ்ச்சியும் வாழ்வின் துன்பங்களை எதிர்கொள்ள போதுமானதாய் இருப்பதற்கு நன்றி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments