இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 16
🔸️ நம் நம்பிக்கையின் வாசஸ்தலம்! 🔸️
ஒரு தேவனுடைய பிள்ளை கர்த்தரிடத்தில் சென்ற பிறகு, தனக்கு அன்பானவர்களிடத்தில் பேசியதைப் போன்ற ஒரு கவிதை:
நான் சென்ற ஸ்தலத்தை நீங்கள் கண்டிருந்தால்....
நான் இருக்கும் ஸ்தலத்தை நீங்கள் கண்டிருந்தால்....
ஆ, அந்த ரம்மியம்... உங்கள் வருங்கால வீடு!
இரட்சகரின் பரவச முகம்! ஆழ்ந்த சமாதானம்!
யாது பயமின்றி.... மட்டில்லா மகிழ்ச்சி!
இத்தனையும் கண்டபின், நான் இல்லா பூமியின் துயரத்திற்கு "மீண்டும் நான் பூமிவர" நிச்சயம் விரும்பிடீர்!!
நான் இருக்கும் ஸ்தலத்தை நீங்கள் கண்டிருந்தால்....
என் பயணம் தனிமையல்ல என் இரட்சகரும் உடனிருந்தார்!
யாத்திரையில் கரம் பிடித்தே இம் மகிமை தேசம் அழைத்து வந்தது அவரன்றோ! ஆச்சரியமும் அடைந்திடுவீர்!
நான் இருக்கும் ஸ்தலத்தை நீங்கள் கண்டிருந்தால்....
நான் கண்டகாட்சி நீங்களும் பார்த்திருந்தால்!
தனிமையும் உணர்ந் திடீர்!
பயத்தையுமே களைந்திடுவீர்!
அவர் கரத்தின் பாதுகாப்பை கண்கண்டு வியந்திடுவீர்!!
கரிசனையாம் காருண்யம் வியந்திடவே பார்த்திடுவீர்!!
நான் இருக்கும் ஸ்தலத்தை நீங்கள் கண்டிருந்தால்....
என்னோடு தேவனும் இருப்பதை கண்டவர்கள்
அனைவருமே அவரண்டை வந்திடவும் வாஞ்சையாய் வழிகாணத் தவிப்பாரே!
இழந்தது ஒரு ஆன்மா எனினும் அவரிதயம் துடிக்குதே!
மீண்டுமே தன்னண்டை வந்திட்டால்
அவரிதயம் மகிழுமே!!
காண்பாய் இவ்வதிசயம்!!
நான் இருக்கும் ஸ்தலத்தை நீங்கள் கண்டிருந்தால்....
அவரமைத்த நித்தியத்தை என்னோடு தங்கியே
பகிர்ந்த உம் உள்ளமும் "பரலோகம் காணுமே!" இம் மகிழ்ச்சி விலகியே வாழ்ந்திடேன் என்பீரே! பரலோகம் என் இல்லம்! அது இன்றி நானில்லை!!
நான் இருக்கும் ஸ்தலத்தை நீங்கள் கண்டிருந்தால்....
"கூடிடுவோம் மீண்டுமென" அன்று நீ அறிந்திடுவாய்!
பிரிந்தாலும் இன்றுமே இடைவெளி சுருக்கமே!
அவரோடு நாளுமே பாதுகாப்பாய் என்றென்றும் தங்கியே பரன் வாசல் காத்திருப்பேன் உனக்காக!
உன்னை வரவேற்கும் அந்நாளே மகிழ்ச்சியின் பொன்னாள்!!
கிறிஸ்தவர்களாகிய நாம் பெற்றிருக்கும் மகிமையான நம்பிக்கை எவ்வளவு பெரிதென்பதை சற்றே தியானித்து இன்புறுங்கள்!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! இம்மண்ணின் கூடாரம் ஒழிந்து, உம்மண்டை சேரும் "வாசஸ்தலம்" எத்தனை மேன்மை என அறிந்தோம்! விழிப்புடன் ஜீவித்து உம்மண்டை சேர கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments