Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 17

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 17


🔸️ சேமித்திடும் ஞானம் வேண்டும்! 🔸️


எதிர்காலத்திற்காகப் பணம் சேமிப்பதைக் குறித்து என்ன? ஒரு இயேசுவின் சீஷன் தனக்கென்று ஒரு வங்கி சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு நிதி (Fixed Deposit) அல்லது வேறு எந்த ரூபத்திலான சொத்துக்கள் வைத்திருக்கலாமா? "பூமியிலே அல்ல, பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்" (மத்.6:20) என்றல்லவா ஆண்டவர் இயேசு கூறியிருந்தார்?!   


இங்கு இயேசு கூறிய சத்தியத்தில் உள்ள உண்மையான கேள்வி என்னவென்றால், "உங்கள் சேமிப்புகளில் யாதொன்று 'எந்த சமயத்தில் உங்கள் பொக்கிஷமாய்' மாறுகிறது?" என்பதே ஆகும். இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலை நாம் கூறிட முடியாது! அல்லது இக்கேள்வியை வைத்து நாம் "பிறருக்கு" சட்டதிட்டங்கள் வகுத்திடவும் நிச்சயமாய் முடியாது!! 


இவ்வுலகின் 'யாதொன்று' 'எப்போது' நம்முடைய பொக்கிஷமாய் மாறுகிறது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை அவரவர்கள்மீதே ஆண்டவர் வைத்துவிட்டார்!! இதைக் கண்டுகொள்ள ஒரு வழி என்னவென்றால், "நான் எதைக் குறித்து அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்?" என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுப்பார்ப்பதுதான்! 


இந்தக் கேள்விக்கு "பணம்" என்பது 'உங்கள் விடையாக' உங்களுக்கு வருமென்றால், "பணமே உங்கள் பொக்கிஷமாய்" மாறிவிட்டது என்பதை கண்டுகொள்ளலாம். இதற்கு மாறாக, "ஆண்டவரும் அவருடைய ஊழியமும்" 'உங்கள் விடையாய்' வரு மென்றால்..... உங்களுக்கு எவ்வளவுதான் பூமிக்குரிய ஆஸ்தி அதிகமாக இருந்தாலும், "உங்கள் பொக்கிஷம் பரலோகத்தில்தான் சேமிக்கப்பட்டிருக்கிறது" என்பதை நீங்கள் தீர்க்கமாய் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்!! 


எதிர்காலத்திற்காக எப்படி சேமிக்க வேண்டும்? என்ற பாடத்தை "எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள்" என சத்திய வேதம் நமக்கு புத்தி சொல்லுகிறது (நீதி. 6:6-11). வரப்போகும் "மழை காலத்திற்கான உணவை சேமித்துக்கொள்" என்று புத்தி சொல்ல ஒரு மூப்பனும் அதற்கு இல்லை! அதைத் தானே செய்து கொள்வதற்குரிய ஞானத்தை எறும்பு பெற்றிருக்கிறது. ஆனால் இன்றோ, அனேக விசுவாசிகளிடம் இந்த ஞானம் இல்லை! ஆகவே ஏதாகிலும் எதிர்பாராத பெரிய செலவுகள் வரும் வேளையில், இவர்கள் பிறரிடம் சென்று பணத்திற்காக கெஞ்சும் நிலைக்கும், கடன் வாங்கும் நிலைக்கும் ஆளாகிறார்கள். 


கடந்த ஒரு வருடத்தில் உள்ள தங்கள் செலவீனத்தில் சற்று ஜாக்கிரதையாயிருந்து, எதிர்காலத்திற்காக கொஞ்சம் சேமித்து வைத்திருந்தால், இதுபோன்ற கடன் வாங்கும் அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதே?! ஆகவே, உங்களால் முடிந்ததை சேமித்து வைப்பது நிச்சயமாய் நல்லதுதான்!! 


ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே! "எங்கள் பொக்கிஷம்" பணத்தில் மாறிவிடாதபடி, உள்ளத்தில் ஞானமாய் சேமித்திட எங்களுக்கு கற்றுக் கொடுத்தமைக்கு, உமக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments