Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 19

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 19


🔸️ விசுவாச ஜீவியத்தில் தடைகள் தூள் தூளாகிவிடும்! 🔸️


கர்த்தருடைய தூதன் "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.... பெரிய பர்வதமே நீ செருபாபேலுக்கு முன்பாக சமபூமியாவாய்" என கம்பீரமாய் முழங்கினான் (சகரியா 4:6,7). அப்படியானால், நம் ஜீவிய பாதையில் மனுஷர்களோ அல்லது பிசாசுகளோ உருவாக்கும் ''பர்வதங்களைக்' குறித்து நாம் ஏன் அஞ்சிட வேண்டும்? இன்று சபையின் தலைவர்களாய் இருப்பவர்கள்கூட, தங்கள் அவிசுவாசத்தினால் தேவனுடைய கரங்களைக் கட்டிப்போட்டுவிடுகிறார்களே!?


ஆனால், தேவனோ இன்று யோசுவாவையும் காலேப்பையும் போன்ற மனுஷர்களைக் காண்பதற்கே வாஞ்சையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறார். யார் இவர்கள்? "எங்கள் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை" என்பதை விசுவாசித்து அதை பாரெங்கும் பிரகடனம் செய்பவர்கள்!! சாத்தானுக்கு விரோதமாக தேவன் 'எப்போதும்' நம் பட்சத்திலேயே நிற்கிறார். அவர் நமக்காக செயல்படுவதை 'எதுவும்' தடை செய்திட முடியாது.... ஆம், நம் அவிசுவாசம் ஒன்றைத் தவிர!! இப்பாருலகின் 7900 கோடி ஜனங்களும், அவர்களோடு சேர்ந்து சாத்தானின் கோடானுகோடி பிசாசுகளும் கைகோர்த்து நம்மை எதிர்த்து நின்றாலும், தேவன் நமக்கென வரைந்த அவரின் திட்டத்தை ஒருக்காலும் சீர்குலைத்திட அவர்களால் முடியாது...எப்போது? நாம் மாத்திரம் தேவனை உறுதியாய் நம்பி நின்றுவிட்டால் அப்படி ஆகும்!!


ஆகவே, என்ன நடந்தாலும் நாம் ஒருக்காலும் சோர்ந்துபோவதோ அல்லது விட்டுவிடுவதோ இல்லை! நாம் செத்தே போனாலும், நம் சர்வ வல்ல தேவன்மீது கொண்ட விசுவாசத்தில்தான் சாவோம்! ஆம், இவ்விதம் சாவிலும் அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதே நாம் கொண்ட நம்பிக்கை!! நம்மோடு போரிடும் பிசாசுகளின் ரூபத்திலோ அல்லது நமக்கு விரோதமாய் குற்றம் சாட்டிடும் நூற்றுக்கணக்கான மனுஷர்களின் ரூபத்திலோ நாம் 'பர்வதங்களைச்' சந்தித்திட தேவன் அனுமதிக்கும்போது, நாம் அவைகளின் மூலமாய் இன்னமும் பெலனடைந்து, ஆவிக்குரிய ஐசுவரியம் பெறுவதே நம்மைக் குறித்து தேவனின் திட்டமாய் இருக்கிறது!


பிசாசுகள் மூலமாய் மனுஷர்கள் மூலமாய் உருவாகும் 'பர்வதங்களை' நாம் விசுவாச துணிவுடன் எதிர்கொள்ளும்போதுதான், சகரியா 4:6,7-ம் வசனங்கள் வெறும் வசன போர்டுகளால் நம் வீட்டில் தொங்காமல்.... நம் இரத்த ஓட்டத்தில் எழுதப்பட்ட ஜீவ வார்த்தைகளாய் மாறுகிறது!!


ஜெபம்:

பரலோக பிதாவே! எங்கள் வாழ்வில் ஏற்படும் 'பர்வதங்களான' தடைகளை விசுவாசத்தோடு எதிர்கொள்ளும்போது அது தூள் தூளாகிவிடும் என எங்களை ஊக்குவித்ததற்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments