Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 26

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 26


🔸️ 'கோபம்' நரகத்திற்கு நடத்தும் பாவம் என அறிய வேண்டும்! 🔸️


கோபத்தைக் குறித்து ஆண்டவராகிய இயேசு கூறிய வசனங்களை தமிழ் வேதாகமத்தில் "தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன்" என துரதிருஷ்டமாய் 'நியாயமில்லாமல்' என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மூல வார்த்தையில் இப்பதம் இல்லை என்பதை என்பதை அறிந்து கொள்ளுங்கள். இப்பூமியில் கோபமடையும் எந்த மானிடனுக்கும் ஏதாகிலும் ஒரு நியாயம் அல்லது காரணம் இருக்கத்தான் செய்கிறது!? எனவே இயேசு குறிப்பிடாத 'நியாயமில்லாமல்' என்ற பதம், இயேசு கூறிய புதிய உடன்படிக்கையின் சத்தியத்தின் வலிமையை குறைப்பதாகவே இருக்கிறது. எனவே சரியான அர்த்தத்தின்படி, "தன் சகோதரனை கோபித்துக் கொள்ளும் யாராயிருந்தாலும் அவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்" என்பதே உண்மையாகும் (மத்தேயு 5:22).  


கோபத்தின் இரண்டாவது படியாய், "ஒருவன் தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத் தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்." அதாவது, ஒருவன் தன் சகோதரனை ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவன் எனக் கூறுவதே சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லும் குற்றத்துக்கு ஏதுவாகும்.  


இக்கோபம் வளர்ந்து, மூன்றாவது படியாய், "தன் சகோதரனை மூடனே (fool) என்று சொல்லுகிறவன் ஏரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்" என்று இயேசு கூறினார். அந்தரங்கத்தில் முதலில் கோபம் தோன்றி, அடுத்து அச்சகோதரனை 'வீணன்' என கருதி, அடுத்து மூன்றாவது படியாக 'முட்டாள்' எனக்கூறி உதாசீனம் செய்யும் எரிநரக தரத்தின் கோபத்திற்குள் ஒருவன் நடத்தப்படுகிறான்!    


புதிய ஏற்பாட்டில் கோபத்தைக் குறித்த விளைவு இவ்வளவு கடுமையாக இருப்பதினிமித்தமே, "நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்... முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து" (மத்தேயு 5:23,24) என்று இயேசு கூறினார்.  


உங்கள் பேரில் உங்கள் சகோதரனுக்கு ஏன் குறை உண்டானது? ஏனெனில், உங்கள் அந்தரங்கத்தில் அச்சகோதரன் மீது கோபமாகிய தீய மனநோக்கத்தை வளர்த்து, அதன் அடுத்தபடியாக அச்சகோதரனை 'வீணன்' என கருதி, அடுத்தபடியாக, உங்கள் சம்பாஷணையில் அந்தரங்க கோபம் கொப்பளித்து, 'முட்டாள்' என மனம் புண்படும்படி பேசிவிட்டீர்கள்! அவ்வார்த்தை உங்கள் சகோதரனுக்கு தீங்கு செய்துவிட்டது. எனவே, உங்கள் நிமித்தமாய் அச்சகோதரனுக்கு உங்கள் மீது இப்போது குறை உண்டாயிற்று! இக்குறை உண்டாவதற்கு காரணமாயிருந்த என் அந்தரங்கத்தில் உருவான கோபத்திற்காக நான்தான் வருந்தி அச்சகோதரனிடம் ஒப்புரவாக வேண்டும்!!   


ஜெபம்:

அன்பின் தகப்பனே! எக்காலத்திலும், யார் மீதும் கோபம் அடையாதிருக்க எங்களுக்கு உதவி செய்தருளும்! கோபம் அடைந்தால், உடனே ஒப்புரவாகிட தயை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments