இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 25
🔸️ ஒருவருக்கொருவர் நன்றியுள்ளவர்களாய் இருந்திட வேண்டும்! 🔸️
நம்முடைய வீட்டில் எத்தனையோ விதத்தில் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கும் மனைவிக்காக நம்மில் எத்தனை கணவன்மார்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறார்கள்?
கணவனாகிய நீங்கள், உங்கள் மனைவிக்காக நன்றியற்றவர்களாக இருந்தால், பின் எப்படி உங்கள் பிள்ளைகள் பெற்றோர்களாகிய உங்களிடம் நன்றியுள்ளவர்களாய் இருந்திட நீங்கள் எதிர்பார்க்க முடியும்?
ஆண்டவர் திரும்பவரும் வேளையில், நம்மில் அனேக கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் நன்றியில்லாத கொடிய கடின இதயம் கொண்டிருந்ததை கண்டு கொள்வார்கள்! அதேபோல், அநேக மனைவிமார்கள் தங்கள் கணவரிடம் எவ்வளவு நன்றியில்லாமல் இருந்தார்கள் என்பதையும் "அன்று" கண்டு கொள்வார்கள்!!
ஒரு சமயம் வகுப்பு ஆசிரியர் தன் மாணவர்கள் முன்பாக, ஒரு மூலையில் சிறு கருப்பு புள்ளி கொண்ட பெரிய வெள்ளை பேப்பரை விரித்து வைத்தார். பின்பு மாணவர்களைப் பார்த்து "மாணவர்களே இங்கு நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?" என கேட்டார். உடனே அனைவரும் "ஒரு கருப்புப்புள்ளி" எனக் கூறினர். அவர்களில் ஒருவர்கூட, அங்கிருந்த "பெரிய வெள்ளைத்தாளை" பார்த்ததாகக் கூறவில்லை! இப்படித்தான் நம் மனுஷீக சுபாவம் இருக்கிறது. மற்றவர்களிடம் காணும் நன்மையைக் காண்பதற்கு குருடர்களாகவும், அவர்களிடமுள்ள "கருப்பு புள்ளியே" இவர்களின் பார்வைக்குத் தெளிவாகவும் தெரிகிறது! இவையாவும் அகந்தையான பெருமையின் விளைவேயாகும்.
தாழ்மை உள்ளவர்கள் தேவன் தங்களுக்குத் தந்த மூப்பர்களுக்காகவும், சக விசுவாசிகளுக்காகவும் எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தங்கள் சகோதர சகோதரிகளினிமித்தம் நன்றியில்லாமல் இருந்திட "சாத்தானின் பெருமையே" அவ்விதம் அவர்களைத் தூண்டுகிறது! ஆம், நாம் ஒருவருக்கொருவர் நன்றி உள்ளவர்களாய் இருக்கும்படியே அழைக்கப்பட்டிருக்கிறோம்! (கொலோ. 3:15). அந்த நபர் உங்களிடமிருந்து மறைந்து அல்லது மரிப்பதற்கு முன்பாக அவர்களுக்கு செலுத்திட மறவாதிருக்கக் கடவோம்!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! நன்றியில்லாத பெருமை கொண்ட இருதயத்தை வெறுக்கிறோம்! ஒருவருக்கொருவர் மெய்யான தாழ்மையுடன் நன்றியுள்ளவர்களாய் வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments