இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 31
🔸️ பிதாவைப்போலவே யாவரையும் நேசித்து அவரது புத்திரனாக வேண்டும்! 🔸️
சூரியனோ அல்லது மழையோ, அவைகளைப் பாகுபாடின்றி நல்லோர்மீதும் தீயோர்மீதும் தேவன் வருஷிக்கச் செய்கிறார். நீதி உள்ளவனின் வயலைப்போலவே, அநீதி உள்ளவனின் வயலும் மழைநீரைப் பெற்று, அநீதி உள்ளவனையும் தேவன் ஐசுவரியவானாக மாற்றுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவ்வாறில்லாமல், நீதி உள்ளவனை மாத்திரமே தேவன் ஆசீர்வதிப்பார் என்றால், அநீதி உள்ளவனின் நிலை இப்பூமியில் பரிதாபத்திற்குரியதாய் மாறிவிடும். ஏனென்றால், இவ்வுலகில் யாரும் பொருளாதார ஆசீர்வாதத்திற்கென்று தன்னிடம் பக்தியாய் வருவதை தேவன் விரும்புவதேயில்லை. நீதிமான்களை தேவன் பொருளாதார ரீதியாய் ஆசீர்வதிக்கிறார் என ஜனங்கள் அறிந்து கொண்டால், ஏராளமான ஜனங்கள் தாங்களும் நீதிமான்களாக வேண்டுமென தேவனிடம் வந்துவிடுவார்கள்! அவ்வாறு அவர்கள் வருவது தேவனை நேசிப்பதினிமித்தமாய் அல்லாமல் அவரிடமிருந்து வெறும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மாத்திரமே இருக்கும்!!
நீதியுள்ள விவசாயிக்கு மாத்திரம் தேவன் மழையை வருஷித்தால், ஏராளமான விவசாயிகள் தாங்களும் நீதிமான்களாய் மாறிவிடுவார்களே!! அவ்வாறு மாறுவது நீதியை நேசித்ததினால் அல்ல.... அவர்களுடைய விவசாயப்பண்ணைக்கு மழை வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்வார்கள்!?
இதினிமித்தமே தனக்கென்று உண்மையாய் இருப்பவர்களை தெளிவாகக் காணும்பொருட்டு, அவர்கள் மிக எளிதில் அநீதி செய்வதற்குரிய சுதந்திரத்தை தேவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். எனவே, இப்போது தங்கள் அநீதியை விட்டு மனந்திரும்பி தேவனிடம் வருகிற ஒருவன், அவ்வித செயலை தேவனை நேசித்துச் செய்யவேண்டுமே அல்லாமல், உலக ஆசீர்வாதங்களை பெறுவதற்காக அல்ல!
தேவனுடைய சுபாவமானது, தீமை செய்பவர்களையும், நன்மை செய்பவர்களையும், நீதி செய்பவர்களையும், அநீதி செய்பவர்களையும், நன்றி உள்ளவர்களையும், நன்றி இல்லாதவர்களையும் ஒரே விதமாய் அன்பு செலுத்தி நன்மை செய்வதே ஆகும்! யாரெல்லாம் இப்பிதாவின் குணாதிசயத்தைத் தங்களில் பெற்றிருக்கிறார்களோ அவர்களே பரலோகப் பிதாவுக்கு புத்திரனாய் மாறிட முடியும்! (மத்தேயு 5:45). இந்த அரிய சிலாக்கியத்தை புதிய உடன்படிக்கையில் வாழும் நமக்கென்றே தேவன் தந்தருளியுள்ளார்.
ஜெபம்:
எங்கள் பரமபிதாவே! தீமை செய்பவர்களுக்கும் நீர் நன்மை செய்வதைப் போலவே, நாங்களும் எங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை மாத்திரமே செய்து, உம்முடைய புத்திரர்களாய் மாறிடும் சிலாக்கியம் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments