Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஆகஸ்ட் 09

 இன்று "அவருடைய" சத்தம்


ஆகஸ்ட் 9


🔸️ ஆவியானவரின் சத்தம் கேட்டிட கவனம் வேண்டும்! 🔸️


நம் ஜீவியத்தில் ஏற்படும் சில சூழ்நிலைகளில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்? என திட்டமாய் அறிந்திட முடியாத நிலையில் நாம் பலமுறை இருந்திருக்கிறோம். எத்தனையோ விஷயங்களைக் குறித்து வேத வாக்கியங்கள் மௌனமாகவே இருக்கின்றன. அதுபோன்ற சமயங்களில், ஆலோசனை கேட்பதற்கென ஒரு பக்தியுள்ள சகோதரனை தேடிப்போவது நமக்கு எப்போதும் சாத்தியமாயிருப்பதில்லை!


தேவ பக்தி நிறைந்த சகோதரர்களின் செய்கையை வைத்தோ அல்லது அவர் சொன்ன வாக்கியங்களை வைத்தோ ஒப்பிட்டு, தாங்கள் செய்த செயலை நியாயப்படுத்துகிறவர்கள், தங்களின் கெட்ட மனசாட்சியைத்தான் நிரூபணம் செய்கிறார்கள்! நம் யாவரையும் 'தனித்தனியாய்' நடத்திச் செல்வதற்கு "பரிசுத்த ஆவியானவரையே" தேவன் நமக்கு வழங்கியிருக்கிறார்!!


உதாரணமாய், சபையின் ஒரு கூட்டத்தில் "உலகத்தில் அன்பு கூராதிருக்கும்படியான" ஒரு புத்திமதியை ஒரு சகோதரி கேட்டிருக்கக் கூடும். இது ஒரு பொதுவான புத்திமதியே அல்லாமல் 'எதையும் குறிப்பாக' கூறவில்லை! புதிய ஏற்பாடு எப்போதுமே இதுபோன்ற பொதுவான புத்திமதிகளைதான் நமக்கு கூறுகிறது. இச்சமயத்தில் ஒரு திருமண வைபவத்திற்கு செல்லவிருந்த அந்த சகோதரி, அந்த வைபவத்தில் விலை உயர்ந்த பளபளப்பான ஆடையை உடுத்த வேண்டுமா அல்லது வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் இக்கட்டான நிலையில் இருந்தார். அந்த கவர்ச்சியான சேலையை உடுத்தலாம் என அவளின் மனது எத்தனையோ காரணங்களை அவளுக்கு கூறியிருக்கக் கூடும்! இந்த தருணத்தில்தான் அவளின் மனநோக்கத்தை சோதித்து அறிந்திட வல்ல பரிசுத்த ஆவியானவர் அவளிடம் "நீ இந்த ஆடம்பர உடுப்பை உடுத்த விரும்பிய ஒரே காரணம், உன் உலக நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் நல்ல மதிப்பைப் பெறலாம் என்பதே ஆகும்!" எனக் கூறினார்.  


இவ்வாறாக, ஆவியானவர் அவளைக் குறித்த உண்மையைச் சொல்லுவதற்கு மிகுந்த பொறுப்புள்ளவராக இருக்கிறார். இருப்பினும் தனக்கு கீழ்படியும்படி அவளை ஒருநாளும் கட்டாயப்படுத்தவேமாட்டார்! எல்லாவற்றிற்கும் கடைசி முடிவானது, அவளையே சார்ந்துள்ளது!! 


நமக்குள் இருக்கும் அந்த அபிஷேகம், சபையில் உள்ள எந்த ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ போதிக்காத எண்ணற்ற காரியங்களை நமக்குப் போதிக்கும்! இருப்பினும் நாமோ, ஆவியானவருக்கு செவிகொடுத்திட மிகவும் கவனமாக இருந்திட வேண்டும்.


ஜெபம்:

பரலோகப் பிதாவே! அன்றாட நடைமுறை ஜீவியத்தில் எது பாவம்? எது உலகம் என தெளிவாய் கூறும் உமது சத்தத்தை கேட்க அதிக கவனம் எங்களுக்குத் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments