Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஆகஸ்ட் 15

 இன்று "அவருடைய" சத்தம்


ஆகஸ்ட் 15


🔸️ தேவனை ஆராதிக்கிறவர்களிடம் உலகத்தின் குறைசொல் இல்லை! 🔸️


 "தேவனை ஆராதிக்கிறவர்களாகவே" பிரதானமாய் ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார். தேவன் மீது பசியும் தாகமும் கொண்ட மனிதர்களாய் இருந்திட வேண்டும்! ஆகவே, ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவனை இடைவிடாது ஆராதிப்பவனாயிருப்பான்!!  

அவனுக்குள்ள ஒரே ஒரு விருப்பம் "தேவன் மாத்திரமே" ஆகும்!! இந்தப் பூமியிலோ அல்லது பரலோகத்திலோ 'தேவனை காட்டிலும்' யாதொன்றையும் அல்லது யாதொருவரையும் அவன் விரும்பவே மாட்டான் (சங்கீதம் 73:25). 'தேவனைக் காட்டிலும்' பணம் அவனுக்கு பெரிதாகத் தோன்றுவதே இல்லை!  


ஒரு மான் நீரோடையை வாஞ்சித்து தவிப்பதைப் போலவே, ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவன்மீது வாஞ்சித்து தவிப்பான். கடும் வறட்சியினால் தாகம்கொண்ட ஒரு மனிதன் தண்ணீருக்காக தவித்துக் கதறுவதைப் போலவே, இவன் தேவன்மீது தாக வாஞ்சை கொண்டிருப்பான்! தன்னுடைய சுகத்தையும் சொகுசையும்விட, ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவனுடைய ஐக்கியத்தையே மேலாக எண்ணி 

வாஞ்சிப்பான்! தன்னோடு தேவன் ஒவ்வொரு நாளும் பேசுவதைக் கேட்பதற்கு மிகுதியான வாஞ்சை கொண்டிருப்பான்!  


இதற்கு மாறாக, பணத்தையும் தங்களது சொகுசையும், ஆராதனை செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும் ஒன்றைக் குறித்து "எப்போதும்" குறை சொல்பவர்களாகவே இருப்பார்கள்!


ஆனால் ஆவிக்குரிய மனிதனோ தேவனை மாத்திரமே நாடுகிறபடியால், தேவன் அவனோடு எப்போதும் இருப்பதினிமித்தம் அவனுக்கோ "யாதொரு குறைச் சொல்லும் இருப்பதில்லை!"


மேலும், தனக்கு நேரிடுகிற எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய பலத்த கரத்தை காண்கிறபடியால், அவருடைய கரத்தில் மகிழ்ச்சியுடன் எப்போதும் அடங்கியிருப்பான்!! 


ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவனோடு தொடர்ச்சியான தொடர்பு உடையவனாக இருக்கிறபடியால், அவனது வாழ்வை நடத்திச் செல்வதற்கு இனி யாதொரு சட்டதிட்டங்களும் அவனுக்கு அவசியமாய் தோன்றுவதில்லை! ஜீவ விருட்சமாகிய தேவனை அவன் கண்டுகொண்டபடியால், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை அவன் மனம் நாடுவதில்லை!! கிறிஸ்துவினிமித்தம் கொண்ட அன்பின் தியானத்தில் ஈர்க்கப்பட்டதினிமித்தம், இரண்டாந்தரமான உலக காரியங்களுக்கு அவன் வழி தவறிச் செல்வதில்லை!!    


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! உம்மை மாத்திரமே ஆராதித்து, இந்த உலகத்தை புறக்கணித்து வாழ்பவர்களின் நிறைவான... குறைசொல் இல்லாத வாழ்வை எங்களுக்குத் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments