இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 22
🔸️ அசுத்த கனவுகளிலிருந்து விடுதலை! 🔸️
அசுத்தமான சிந்தனைகளை நாம் ஜெயித்திட முடியுமா? இப்பகுதியில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், கொஞ்ச காலத்திற்குள் அதற்கு மரணம் சம்பவிப்பதை நாம் கண்டிட முடியும்! நாம் மனந்திரும்பாத நாட்களில் அனேக ஆண்டுகளாய் இந்த "அசுத்த கனவாகிய" பாம்பிற்கு தீனி போட்டிருந்தால், இப்பாம்பிற்கு மரணம் சம்பவிப்பதும் சில வருடங்கள் ஆகக்கூடும். நம் கனவுகள் (dreams) தூய்மையாய் இருப்பதை வைத்தே இதை அறிந்து கொள்ளலாம்.
அசுத்தமான கனவுகள், அறிந்து செய்யும் பாவங்கள் (Conscious sins) அல்ல. அவை அறியாது செய்திடும் (Unconscious sins) பாவங்கள்தான். அதாவது, மாம்சத்தின் அடிமைத்தனமே பாவப்பிரமாணத்திற்கு ஊழியம் செய்கின்றது. ஆகையால், நாம் அவ்வித கனவுகள் குறித்து குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை (ரோமர் 7:25; 8:1). நாம் இவைகளை அறிக்கை செய்யாமலே, இயேசுவின் இரத்தம் நம்மைக் கழுவி சுத்திகரித்துவிடும். ஆம், அறிந்த பாவங்கள் மாத்திரமே அறிக்கை செய்யப்பட வேண்டும்.
1யோவான் 1:7-ம் வசனம் அறியாத பாவங்களையே குறிப்பிடுகின்றது. நாம் ஒளியில் நடந்தால், நம் எல்லா அறியாத பாவங்களையும் இயேசுவின் இரத்தம் 'தானாகவே' நம்மைச் சுத்திகரித்துவிடும். ஆனால், 9-ம் வசனமோ நாம் அறிந்த பாவங்களை அறிக்கை செய்து பெறும் மன்னிப்பைக் குறிப்பிடுகின்றது. ஆகிலும், நம் கனவுகள் படிப்படியாய் தூய்மையாகிக்கொண்டே வருவதுதான், நம் சிந்தை வாழ்வில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை அறிவதற்குரிய சிறந்த சாட்சியாகும்.
அவைகள் மறுபடியும் தோன்றினால்...? சரிதான், நாம் சிந்தை வாழ்வில் மறுபடியும் பின்மாற்றமடைந்து வீழ்ச்சியுற்றதே இந்த அறிகுறி! இவ்விதம் நம் சிந்தை வாழ்வில் நாம் எவ்வளவு உண்மை உள்ளவர்களாக இருக்கிறோம்? என்பதை கணக்கிடுவதற்கு இந்தப் பரீட்சை நமக்கு மிகவும் உதவுகின்றது. 100% உண்மையான ஜீவியம் சம்பூர்ண வெற்றியை நமக்குக் கையளித்துவிடும்!
பாலிய இச்சையில் நாம் 100% உண்மையாய் இருப்பதென்பது, ஒரு ஸ்திரீயின் அல்லது ஓர் ஆடவனின் சௌந்தர்யமான முகத்தை ரசிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல், இவ்வித ரசனைக்கு முன்னோடியாய் அதைத் தழுவி நிற்கும் எவ்வித காம சிந்தையும் கொள்ளாமல் இருப்பதுதான்! இவ்வித உண்மையை நாம் கைக்கொள்ள கட்டளையிடுவதே நீதிமொழிகள் 6:25-ல் "உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே" என கூறப்படும் வசனமாகும். இந்த விஷயத்தில் உண்மையாய் இருந்து, தங்கள் கனவுகளில் தூய்மை பெற்றவர்களும் மிகவும் கொஞ்சமே உள்ளார்கள்!!
ஜெபம்:
அன்பின் தந்தையே! நாங்கள் அறிந்து வாழும் எல்லையில், சிந்தையில் தூய்மையாய் வாழ்ந்து, அசுத்த கனவிலிருந்து விடுதலைபெற உதவி செய்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments