இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 25
🔸️ நாம் சாட்சி சொல்வதில் தெய்வ பயம் வேண்டும்! 🔸️
நம் கிறிஸ்தவ ஜீவியத்தில் "சாட்சி கூறி" பிறரை கிறிஸ்துவுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்தான். இச்சமயத்தில் நம்மில் ஒருவராகிலும் "தேவனுடைய மகிமையில்" 'முழுவதுமோ' அல்லது 'அதிக பட்சமோ' நமக்கென எடுத்துக் கொள்ள துணியமாட்டோம் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அதில் 5% அல்லது 10% மகிமையைத்தானே நமக்கென எடுத்துக் கொள்கிறோம்!? "இத்தனை அரும்பாடுபட்ட எனக்கு இந்த குறைந்த அளவு கமிஷன்கூட வேண்டாமா?" என்றே நம் உணர்வே நம்மை சமாதானப்படுத்த முயல்கிறது. காரியம் இவ்வாறாய் இருக்க, இன்றைய பெரும்பாலான சபைகளில் "இக்கபோத்" (தேவனுடைய மகிமை விலகிற்று) என தேவன் எழுதிவிட்டது நம்மை ஆச்சரியப்பட வைத்திட அவசியமேயில்லை! ஆம், "தேவனுடைய மகிமையைத்" தொடுவதற்கு நாம் யாவரும் அச்சம் கொண்டிருக்க வேண்டும்.
நம் தேவன் "வைராக்கியம்" நிறைந்த தேவன்; அவர் தன் மகிமையை குறைந்த சதவீதத்தில்கூட வேறொருவனுக்குத் தரமாட்டார்! (ஏசாயா 42:8). இங்குதான் "தெய்வ பயம்" நமக்கு அதிகமாய் வேண்டும்!!
இதன் நிமித்தமாய், "நாம் ஒருபோதும் சாட்சி சொல்லவே கூடாது" என வலியுறுத்துவதாக நீங்கள் எண்ணிவிடக்கூடாது. நம் ஜீவியத்தின் மூலமாகவும், நம் ஊழிய பிரயாசங்களின் மூலமாகவும் தேவன் செய்தருளிய மகத்துவங்களை "ஏற்ற நேரத்தில்" பிறருக்கு கூறுவது மிகவும் சரியானதே ஆகும். ஆனால், நாமோ தேவனுடைய நேரத்திற்கு அடங்கியிருக்க கற்றுக்கொண்டு, அவருடைய நேரம் வரும்போது மாத்திரமே அவருடைய கிரியைகளைப் பேசி... உடனே நம்மை மறைத்துக் கொள்ளவும், நம்மையே முழுவதும் மறந்து போகிறவர்களாயும் இருக்க வேண்டும்.
பவுல் ஒரு சமயம் மூன்றாம் வானத்திற்கே எடுத்துக்கொள்ளப்பட்டும், அந்த சம்பவத்தை 14 வருடங்களாய் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், தன்னுடைய "அப்போஸ்தல அழைப்பை" நிரூபிக்க வேண்டிய தருணத்தில் மாத்திரமே அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார். இருப்பினும், அதைக் குறித்த முழு விபரங்களையும் கூற மறுத்துவிட்டார் (2 கொரி.12:2). சாட்சி சொல்லுவதிலும் அத்தனை "தெய்வ பயம்" பவுலிடம் இருந்தது!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! சாட்சி என்ற பெயரில் எங்களின் சுயமதிப்பைத் தேடாதிருக்க கிருபை புரிந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments