இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 26
🔸️ மனுஷர் பார்வையில் சிறியோராய் இருப்போரே தேவனுடைய சம்பத்துக்கள்! 🔸️
இவ்வுலகத்தில் சிலர், தாங்கள் மேலான பதவியைப் பெறுவதற்கு "யாருடைய தோளின்மீது ஏறினாலும் அல்லது யாரைத் தங்கள் காலின் கீழ் போட்டு மிதித்தாலும்" அதையெல்லாம் குறித்து கடுகளவுகூட அக்கறையற்றிருப்பார்கள். இன்று கிறிஸ்தவ-சுவிசேஷ ஊழிய உலகத்திலும் இவர்களைப் போலவே ஸ்தானத்தை இச்சித்து அதைப் பற்றிக்கொள்ள நாடுகிறவர்களை காண்பது ஆச்சரியமும், வேதனையுமாய் இருக்கிறது! இக்கேடான கிறிஸ்தவர்கள் தாங்கள் சூப்பரிண்டெண்ட் ஆவதற்கும், மூப்பர் ஆவதற்கும், பொக்கிஷதாரார் ஆவதற்கும், கமிட்டி செயலாளராய் மாறுவதற்கும், திட்டங்கள் வகுத்து, தனக்கு ஆதரவாக மெஜாரிட்டி ஆட்களைத் திரட்டி.... தவியாய் தவிக்கிறார்கள்!!
இவை அனைத்தும் கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்கு முற்றிலும் விரோதமானவைகளே ஆகும்! தேவனுடைய மகிமையைக் கண்ட எவனும், இந்த உலகத்தின் புகழையோ அல்லது சுவிசேஷ-ஊழிய உலகத்திலுள்ள புகழையோ அடைவதற்கு ஓடும் அருவருப்பான சுண்டெலி - ஓட்டப்பந்தயத்தில் ஒருபோதும் தன்னை சேர்த்துக்கொள்ளவே மாட்டான்!! அவனோ, தான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பந்தயப் பொருளுக்காக (பரிசுக்காக) இலக்கை நோக்கித் தொடர்வதிலேயே பேரார்வமும், சுறுசுறுப்பும் கொண்டவனாய் இருப்பான். இதைத் தவிர, பிறருக்கு தண்ணீர் வார்ப்பதற்கும், தரையைத் துடைப்பதற்கும் மாத்திரமே விருப்பம் கொண்டு... இந்த பூமியில் தன் தேவனை மகிமைப்படுத்துவதையே தன் பிரதான நோக்கமாய் கொண்டிருப்பான்!!
தேவனுடைய விலையேறப்பெற்ற சம்பத்துக்களாயிருப்பவர்கள்... அனேகமாய், எளிய மக்கள் மத்தியிலும், நம் சபைகளில் அறியப்படாத ஜனங்களுமாய் இருக்கிறவர்கள் மத்தியிலுமே காணப்படுகிறார்கள்!!
யோவான் ஸ்நானகனைப் போலவே, "கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருக்கும்" விருப்பத்தையே தேவன் நம் இருதயத்தில் அருளிச் செய்வாராக! (லூக்கா 1:15). தேவனுடைய கண்களுக்கு முன்பாக, யோவான் ஸ்நானகன் எப்படி பெரியவனாய் காணப்பட்டான் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதை அவனே வெளிப்படுத்தியதின்படி, அவனுடைய வாழ்வின் தீராத வாஞ்சையாய் இருந்ததெல்லாம் "அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்!" (யோவான் 3:30) என்பதேயாகும்! ஆம், கிறிஸ்துவே எப்போதும் பிரதானமாய் இருக்கும்படி... அவனோ தொடர்ச்சியாக பின்திரைக்குச் சென்று, மங்கி மறைவதற்கே நாடினான்!!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! கர்த்தருக்கு முன்பாக பெரியவனாய் இருக்கும் விருப்பமே எங்கள் முன் எப்போதும் இருந்து, இவ்வுலகிலோ தாழ்மையாய் ஜீவித்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments