இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 30
🔸️ நம் தேசத்தில் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட வேண்டும்! 🔸️
கீழ்காணும் இரண்டு கேள்விக்குரிய பரீட்சையில், உங்கள் சொந்த பெயருக்கு நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்களா? அல்லது தேவனுடைய நாமத்திற்கு (பெயருக்கு) அக்கறை கொண்டிருக்கிறீர்களா? என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும்.
1. உங்களைக் குறித்தோ அல்லது உங்கள் பிள்ளைகளைக் குறித்தோ அவதூறான செய்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் உங்களுக்குள் தோன்றும் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது?
2. யாரோ சில கிறிஸ்தவ தலைவர்கள் பாவத்தில் விழுந்து விட்டதாலும் அல்லது பணத்தை அநீதியாய் கையாடியதாலும் கர்த்தருடைய நாமத்திற்கு அவகீர்த்தி ஏற்பட்டுவிட்டது என நீங்கள் கேள்விப்பட்டபோது, உங்களுக்குள் தோன்றிய பிரதிபலிப்பு யாது?
இந்த இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் நேர்மையாக கூறும் பதில் மூலம், உங்கள் சொந்தப் பெயருக்கு எவ்வளவாய் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், கர்த்தருடைய பெயருக்கு எவ்வளவு 'சொற்பமாக' நீங்கள் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பதையும் நீங்கள் கண்டுகொள்ள முடியும்.
உங்கள் குடும்பத்தைப் பற்றிய அவதூறான கதைகளை யாரோ பரப்பிவிட்டதை நீங்கள் கேட்டதினிமித்தம் நீங்கள் எவ்வளவு ஆத்திரம் அடைந்தீர்கள்! அந்த ஆத்திரத்தின் பிரதிபலிப்பில் 10%ஆவது கர்த்தருடைய நாமத்திற்கு ஏற்பட்ட தீமைக்கு நீங்கள் காட்டியதுண்டா? இங்குதான் நீங்கள் எவ்வளவாய் உங்களையே நேசிக்கிறீர்கள் என்பதையும், உங்கள் சொந்த பெயரில் எவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பதையும் கண்டுகொள்ள முடியும்!
நம் இந்திய தேசத்தில் தேவனுக்கு இன்று அதிக பயன் உடையவர்களாய் இருப்பவர்கள், சபைக்கு கிரமமாய் போகிறவர்கள் அல்ல! அல்லது அங்கு சென்று பிரசங்கிப்பவர்களும் அல்ல! மாறாக, தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து "பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் எங்கள் இந்தியாவில் மகிமைப்படுவதாக" (மத்தேயு 6:9) என்ற பெருமூச்சோடு உண்மையாய் ஜெபிக்கிறவர்களும், அதற்காகவே வாழுகிறவர்களுமே அதிக பயன் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! கிறிஸ்தவர்களின் வீழ்ச்சியால் உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்கி, உம்முடைய நாமம் எங்கள் மூலமாய் எங்கள் தேசத்தில் மகிமைப்பட கிருபை செய்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments