Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 06

 இன்று "அவருடைய" சத்தம்


செப்டம்பர் 6


🔸️ நம் பாவங்களை நேர்மையாய் அறிக்கை செய்திட அச்சம் தேவையில்லை! 🔸️


நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் என்றே வேதம் கூறுகிறது (ரோமர் 5:9). தேவன் நம்மை சுத்திகரிக்கும் வேளையில் நம்மை நீதிமான்களாயும் ஆக்கிவிடுகிறார். "நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்" என்ற வார்த்தையின் பொருள் யாதெனில், "இதுவரை என் ஜீவியத்தில் நான் ஒருபோதும் பாவம் செய்யாதவனைப் போலவும், இப்போது நான் பூரணமான நீதி உள்ளவனைப் போலவும் இருக்கிறேன்" என்பதேயாகும். இது மகா அற்புதமல்லவா!


வரிசை வரிசையாக நம் பாவங்கள் ஓரு கரும்பலகையில் எழுதப்பட்டு இருப்பதாகவே சித்தரிக்கலாம். இப்போது அந்த கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த எண்ணற்ற பாவக் குறிப்புகள் யாவும் ஓர் ஈரத்துணியினால் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டது! இப்போது அந்தக் கரும்பலகையில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? ஒன்றுமில்லை!! அந்தப் பலகையில் இதுவரை எதுவுமே எழுதப்படாதது போலவே இப்போது தோற்றமளிக்கிறது. இவ்வாறாகத்தான் இயேசுவின் இரத்தமும் நம்மை முழுமையாகக் கழுவி சுத்திகரிக்கிறது. மேலும் "நான் அவர்கள் பாவங்களை இனி நினையாமல் இருப்பேன்" (எபி 8:12) என்றும் தேவன் வாக்குரைக்கிறார்!! இவ்வாறு "நான் உண்மையாகவே மன்னிக்கப்பட்டுவிட்டேன். இனியும் நான் மறுபடியும் மறுபடியும் என் பாவங்களைத் தேவனிடம் அறிக்கை செய்யவேண்டியதில்லை" என, என் இருதயத்தில் உணர்வது எத்தனை பெரிய இளைப்பாறுதலைத் நமக்குத் தருகிறது பார்த்தீர்களா!


 "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்" என கல் தெறித்தது போல் குறிப்பாக ஜெபிக்கும் ஜெபமே மேலான ஜெபமாகும்! ஆனால் இன்று அநேக ஜனங்கள், "ஆண்டவரே, நான் அநேக பாவங்கள் செய்திருக்கக்கூடும்...." என 'மேலோட்டமாக' 'பொதுவாக' ஜெபிக்கிறார்கள். அதாவது தாங்கள் செய்த பாவம் இன்னது என உறுதியாக அறியாததுபோல் ஜெபிக்கிறார்கள்! ஏனென்றால், உங்கள் ஜெபத்தில் "நீங்கள் பாவமே செய்யாதிருக்கக்கூடும்" என்ற தோற்றத்தையே உருவாக்கிவிட்டீர்கள்! நீங்கள் தேவனிடம் வரும்போது, "ஆண்டவரே, நான் பாவம் செய்துவிட்டேன். அந்த சகோதரனுக்கு விரோதமாக என் உள்ளத்தில் கசப்பு கொண்டேன். நான் அவனுக்குச் செய்த நன்மையின் நோக்கம் சுயநலமானதாகும்.... நான் இவைகளை என் சொந்த மகிமைக்காகவே செய்தேன்" என்றெல்லாம் குறிப்பாகச் சொல்லி ஜெபிப்பதுதான் உண்மையான ஜெபமாகும். நீங்கள் எப்போதும் தேவனிடம் யாதொன்றும் மறைக்காமல், நேர்மையாக ஜெபித்திட அச்சப்படாதீர்கள்!


 ஜெபம்:

எங்கள் பிதாவே! இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்கள் பாவங்களை மன்னித்து "நீதிமான்களாய் மாற்றுகிறபடியால்" இனியும் எந்த பாவங்களையும் மறைக்காமல் அச்சமின்றி அறிக்கை செய்திட கிருபை தாரும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


 எழுதியவர்:

 சகோதரர் சகரியா பூணன்.


 "இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments