Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 07

 இன்று "அவருடைய" சத்தம்


செப்டம்பர் 7


🔸️ தன் அந்தரங்கத்தில் தூய்மையை நாடுபவனே ஆவிக்குரியவன்! 🔸️


பரத்தின் மேலானவைகளில் கண்ணோக்கமாய் இருப்பவன், நிச்சயமாய் உள்ளான தன் அந்தரங்கங்களைக் காண்பதற்கும் நடத்தப்படுவான்! தேவனுடைய மகிமையைக் கண்ட ஏசாயா "உடனடியாகவே" நீசப் பாவியாகிய தன் அந்தரங்கத்தையும் கண்டுவிட்டான் (ஏசாயா 6:1-5). இதே போலவே யோபுவுக்கும், பேதுருவுக்கும், யோவானுக்கும் சம்பவித்தது! (யோபு 42:5,6, லூக்கா 5:8, வெளிப்படுத்தின விசேஷம் 1:17). நாம் தேவனுடைய பிரசன்னத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்தால், நம் ஜீவியத்தில் கிறிஸ்துவைப்போல் அல்லாத ஏராளமான நீசத் தன்மைகளை நாம் கண்டுகொள்ள முடியும்! இவ்வாறு, ஆவிக்குரிய மனிதன் தன் ஜீவியத்தில் மறைந்திருக்கும் பாவங்களைக் குறித்து தொடர்ச்சியான வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டே இருப்பான்!


"பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்" (சங்கீதம் 29:2) என்றே நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். இந்த பரிசுத்தத்தின் அலங்காரம் இல்லாமல் அல்லது ஆடை இல்லாமல் இருப்பது, ஆண்டவருக்கு முன்பாக "நிர்வாணமாய்" நிற்பதற்கு ஒப்பானதேயாகும்! ஆகவேதான், ஆவிக்குரிய மனிதன் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் தன் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாக வைத்திருக்க நாடுவான் (அப்போஸ்தலர் 24:16). 


ஒரு வியாபாரி அதிக பணம் சம்பாதித்திட தன்னால் இயன்ற முயற்சிகளை செய்வதுபோல.... ஆராய்ச்சி செய்திடும் ஒரு விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்புகளுக்காக தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வதுபோல..... ஆவிக்குரிய மனிதனும் தன் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாய் காத்துக்கொள்ள தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வான்!


ஒரு ஆவிக்குரிய மனிதன், மற்ற விசுவாசிகள் தங்கள் ஜீவியத்தில் ஒரு பொருட்டாக எண்ணாத பகுதிகளிலும் வெளிச்சம் பெற்றவனாய் தன்னை கழுவிக்கொண்டு, தொடர்ச்சியாக தன்னை நியாயந்தீர்த்து வாழ்ந்திடுவான்!! ஒரு ஆவிக்குரிய மனிதன், தான் தேவனுக்கு வலிமை உள்ளவனாக விளங்குவதற்குத் தடையாய் நிற்கும் அனேக காரியங்களுக்கு தன் உள்ளான ஜீவியத்தில் ஒவ்வொரு நாளும் மரித்திட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவனாக இருப்பான்! 


ஆகவே அவனுடைய ஜீவிய பாதை அனுதினமும் சிலுவை சுமக்கும் பாதையாய் மாறி, "தன் சரீரத்தில் இயேசுவின் மரணத்தை எப்போதும் சுமந்து திரியும் நிலைக்கு வந்துவிடுவான் (2 கொரி 4:10).


ஜெபம்:

பரலோக பிதாவே! உம் மகிமையையும் உம் தூய்மையையும் நாங்கள் எவ்வளவு அறிகிறோமோ, அதே அளவில் எங்கள் அந்தரங்க ஜீவியத்தில் உள்ள அசுசிகளைக் களைந்து வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments