இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 9
🔸️ நன்றி நிறைந்த உள்ளத்தில் துதி நிறைந்திருக்கும்! 🔸️
நன்றியினால் நிறைந்த உள்ளமே, துதியினாலும் எப்போதும் நிறைந்து இருக்க முடியும்! தேவன் தனக்கு செய்த ஒவ்வொரு செயலுக்கும் தங்கள் இருதயத்தில் நன்றியால் நிறைந்திருப்பவர்களுக்கு, தேவன் எண்ணற்ற தமது இரட்சிப்பை அருளி மகிழ்ந்திடுவார்!
10 குஷ்டரோகிகள் ஆண்டவர் இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே எங்களுக்கு இரங்கும்" என சத்தமிட்டபோது, அவர்கள் அனைவரையும் இயேசு சுகப்படுத்தினார் என்று நாம் யாவரும் அறிந்திருக்கிறோம் (லூக்கா 17:12-14). இருப்பினும் அவர்கள் அனைவரும் "இரட்சிப்பை" கண்டடைந்தார்களா? இல்லை.... அந்த பத்து பேருக்கும் "இரட்சிப்பை" அருளவே இயேசு விரும்பினார். ஆனால், அவரிடம் திரும்பி வந்து நன்றி சொல்ல, அந்த ஒரு சமாரியன் மாத்திரமே வந்தான்! இன்றும் ஆண்டவர் இயேசு மூலமாய் "சுகம்" அல்லது "நன்மை" பெற்றிட விரும்புகிறவர்கள் ஏராளம்! ஆனால், அவைகளை பெற்றபின்பு, "அவரை நேசித்து" அவரண்டை வருபவர்கள், இந்த சமாரியனைப் போல ஒருசிலரே இருக்கிறார்கள். ஆகவேதான், இந்த வெகு சிலரே அவர் தரும் "ஜீவனைப்" பெற்றுக் கொள்கிறார்கள்!!
நன்றியால் நிறைந்து இயேசுவின் பாதத்தில் விழுந்து தொழுது கொண்ட அந்த சமாரியனிடம் "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" (வசனம் 16-19) என இயேசு கூறினார். அவர் தந்த "இரட்சிப்பை" அந்த 9-குஷ்டரோகிகள் பெறாமலே போய்விட்டார்கள்! வெறும் சுகத்தை மாத்திரமல்ல... முற்றும் முடிய தன்னை காத்து இரட்சிக்கும் இரட்சகரை அந்த சமாரியனே பெற்றுச் சென்றான்!
எபேசியர் 5:20 கூறும் "எல்லாவற்றிற்காகவும்" தேவனை ஸ்தோத்தரிக்கும் ஜீவியம் "ஆவியினால் எப்போதும் நிறைந்து" வாழ்பவனுக்கே (வசனம் 18) சாத்தியமாகிட முடியும்! ஆவியில் நிறைந்து வாழ்பவர்களுக்கு மாத்திரமே "எல்லாவற்றிற்காகவும்" ஸ்தோத்திரம் செய்திடும் வாழ்க்கையை இயேசு கற்றுத் தருகிறார்.
ஆவியினால் நிறைந்த "புதிய திருமண தம்பதிகளுக்கு" தேவன் தன்னுடைய விசேஷ பரிசாக அவர்களின் "திருமண முதல் மூன்று ஆண்டுகள் பொருளாதார நெருக்கடியை" வழங்கினால் அது அவர்களுக்கு மிக்க நலமாயிருக்கும் என்றே நான் கருதுகிறேன்! தங்கள் இல்லாமையிலும் தேவனை முறுமுறுக்காமல், தங்கள் கணவன் அல்லது மனைவியை முறுமுறுக்காமல்.... அந்த பொருளாதார நெருக்கடியிலும் மனரம்மியமாய் எப்போதும் துதி செலுத்தும் வாழ்க்கையை, அந்த குறைவான மூன்று ஆண்டுகளில் கற்றுக் கொண்டதே இவர்கள் தேவனிடமிருந்து பெற்ற ஒப்பற்ற பரிசாகும்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! உம்மிடம் பெற்ற ஒவ்வொரு நன்மைக்கும் நன்றி உள்ளவர்களாய் இருந்தால் மாத்திரமே, 'எல்லாவற்றிற்காகவும்' துதி செலுத்த முடியும் என கற்றுத் தந்ததற்காக ஸ்தோத்திரம்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments