இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 20
🔸️ T.V. பிரசங்கம் நம் மெய் விசுவாசத்தை மங்க வைத்துவிடக்கூடாது! 🔸️
இன்று ஜனங்களுக்கு "பாவத்தை ஜெயிப்பதைவிட" "சரீர சுகமே" மேலோங்கிய விண்ணப்பமாயிருக்கிறது! இவர்களுக்கு ஆத்துமாவைவிட, சரீரமே எல்லாம் என ஆகிவிட்டது!! இந்த நிலைக்கு காரணம் "இன்றைய பிரசங்கிகள்" என்றே கூறலாம்! அதுவும் இன்றைய "T.V. பிரசங்கிகள்" அதிக கேடு செய்கிறார்கள்! அன்றைய விசுவாச வீரர்கள் "தேவனுக்கு எவைகளை இன்னும் அதிகமாய் கொடுக்கலாம்!" என்பதில் வாஞ்சையும் ஜெபமும் கொண்டிருந்தார்கள்! இன்றைய தரம்கெட்ட விசுவாசமோ "தேவனிடத்திலிருந்து எவைகளை இன்னும் அதிகமாய் பெற்றுக் கொள்ளலாம்!" என்பதில் சரிந்து உருண்டுபோய்விட்டது! இந்த தரம் கெட்ட விசுவாசத்திற்கே "ஏராளமான விசுவாசிகள்" சபையில் சேர்கிறார்கள்!! இதினிமித்தம் இவர்களின் தரம் கெட்ட சுய-நல ஜெபத்தாலும்... முடிவில், இவர்களைக் கொண்ட சபையும் தரம் கெட்ட சபைகளாய் போய்விடுகிறது!! ஆ, இது துயரம்!!
T.V. பிரசங்கிகள் துரிதமாய் விதைத்துக் கொண்டிருக்கும் இந்த "போலி விசுவாசத்திற்கு" எதிராய் நாம் "போர் முழக்கம்" விடுக்க வேண்டும்! அன்று மார்ட்டின் லூத்தர் கூறும்போது, "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்" என இயேசுவின் இரத்தத்தினால் உண்டான பாவ மன்னிப்பையும், நீதியாகுதலையும் முன்வைத்து.... "இன்று நான் இந்த போர்க்களத்தில் நிற்கிறேன்!" என்றார். அந்தப் போர்க்களம் இப்போது முடிந்துவிட்டது!
இன்று நமது போர்க்களமாய் இருப்பதெல்லாம் "விசுவாசத்தினாலே ஐஸ்வர்யம், சுகம், சௌக்கியம்..." என்ற சீர்கெட்ட போலி விசுவாசத்திற்கே போர்க்கோலம் ஏற்றிட வேண்டும்!!
ஜெபம் என்ற மா வலியதோர் ஆவிக்குரிய ஆயுதம்... இன்று எப்படி எப்படியோ தேய்ந்து மழுங்கி சீர்கெட்டு நிற்கிறது! ஆனால், குழு ஜெபம்... சங்கிலி ஜெபம்... மாத ஜெபம்... இன்னும், எப்படி வகைவகையாய் பிரித்து, பிரித்து வைத்து ஜெபிப்பது போன்ற Method- 'வரையறைப்படுத்திய ஜெபங்களோ' ஏராளம் மலிந்து கிடக்கிறது! ஆம், இன்று "தேவ பக்தியின் (ஜெபத்தின்) வேஷம் - Form உண்டு! ஆனால், அங்கு வல்லமை இல்லை!!" (2 தீமோத்தேயு 3:5).
இந்த நிலை மாறி, "தேவனுடைய இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும்" (மத்தேயு 6:10) என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் வல்லமை நிறைந்த ஜெப வீரர்களாய் மாறிட, தேவன் நம் ஒவ்வொருவருக்கும் அருள்புரிவாராக!
ஜெபம்:
எங்கள் பரலோக தகப்பனே! "மாயமற்ற விசுவாசத்தை" எங்களில் வைத்திட விரும்பும் உம்முடைய தூய வசனங்கள், இன்று T.V. பிரசங்கங்களால் கறைபட்டு "மாய விசுவாசமாய்" மங்கிவிட்டதே!! இந்த வஞ்சகத்திலிருந்து எங்களை காப்பாற்றும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments