இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 21
🔸️ நம் சரீரமாகிய தேவனுடைய வீட்டில் பரிசுத்தம் வளர வேண்டும்! 🔸️
ஒரு சமயம் புகைப்பிடிக்கும் ஒரு கிறிஸ்தவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவரிடம், "உங்கள் சபையில் அமர்ந்து நீங்கள் சிகரெட் குடிக்க முடியுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர் "அது ஒருக்காலும் முடியாது! ஏனெனில், சபை கட்டிடம் தேவனுடைய வீடு!" என்றார். அப்போது நான் அவரை திரும்பிப் பார்த்து, "சகோதரனே, உண்மையில் உங்கள் சரீரம்தான் தேவனுடைய வீடு (1கொரிந்தியர் 6:19). யாதொரு சபை கட்டிடமும் தேவனுடைய வீடு அல்ல!" என்றேன். மேலும், "நீங்கள் உரைத்துபோல், ஒரு சபை கட்டிடத்திற்குள் விபசாரம் செய்ய மாட்டீர்கள்! சபை கட்டிடத்திற்குள் ஆபாச இணையதளத்தை பார்க்க மாட்டீர்கள்! ஆனால், கிறிஸ்து உங்களுக்குள் வாழும்போது, உங்கள் சரீரம்தான் இப்போது தேவனுடைய வீடாய் இருக்கிறது. ஆகவே உங்கள் சரீரத்திலுள்ள அவயவங்களை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறித்து மிகுந்த கவனமாய் இருங்கள்!" எனக் கூறினேன்.
ஆம், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்து அருந்துதல் அல்லது அசுத்தமான எண்ணங்களை நம் சிந்தைக்குள் வர அனுமதித்தல்... ஆகிய யாவும் நம் சரீரத்தையும் நம் மனதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிடும்!!
கிறிஸ்தவ ஜீவியம் ஒரு பந்தய ஓட்டத்திற்கே ஒப்பாயிருக்கிறது. நாம் பாவத்தைவிட்டு திரும்பி, மறுபடியும் பிறந்தவுடன், இந்த ஓட்டப்பந்தயத்தின் துவக்க எல்லையில் வந்து நின்று விடுகிறோம். பின்பு இந்த பந்தய ஓட்டம் துவங்கி, நம் ஜீவ காலமெல்லாம் தொடர்ந்து ஓடவேண்டும். நாம் ஓடுகிறோம்... ஓடுகிறோம்... ஓடிக்கொண்டே இருக்கிறோம்! இவ்வாறாக, ஒவ்வொரு நாளும் பந்தய முடிவின் எல்லைக் கோட்டை நெருங்கி, நெருங்கிச் சென்று கொண்டே இருக்கிறோம்! ஆனால், நாமோ நம்முடைய ஓட்டத்தை ஒருநாளும் நிறுத்திவிடக் கூடாது!
இதுதான், இந்தப் பூமியில் நாம் வாழவேண்டிய மிகச் சிறந்த வாழ்க்கையாகும்! ஏனெனில், இதன் மூலமாய் நம் ஜீவியத்திலுள்ள கெட்ட பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தூய்மை பெற்று... வருடங்கள் செல்லச் செல்ல, நாம் தேவனைப் போலவே அதிக அதிகமாய் உருமாறிவிடுவோம்!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்கள் சரீரத்தை உமது வீடாக மாற்றியதற்கு நன்றி! உமது வீடு நாளுக்குநாள் பரிசுத்தத்தில் வளர்ந்துவர கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments