Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 23

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 23


🔸️ "மனந்திரும்ப" வலியுறுத்தும் மெய் சுவிசேஷம்! 🔸️


யோவான் ஸ்நானகன் தொடங்கி, ஆண்டவராகிய இயேசுவும், பவுலும், பேதுருவும், மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் "மனந்திரும்பதலையே" எல்லாவற்றிற்கும் முதலாக பிரசங்கித்தார்கள். ஆனால் இன்றோ, துரதிருஷ்டவசமாக, "மனந்திரும்புதல்" கடைசிக்கெல்லாம் கடைசியாக பிரசங்கிக்கப்படுகிறது!! 


இதற்கு நேர்மாறாக, தேவனை-மையமாகக் கொண்ட சுவிசேஷமோ, "மனந்திரும்பும்படியே" மனுஷனை அழைக்கிறது! மெய்யான மனந்திரும்புதல் கீழ்க்கண்டவாறு மனுஷனுக்கு அறைகூவல் விடுக்கிறது:


▪︎ ஒவ்வொருவரும் தங்கள் ஜீவியத்தில் மையமாய் வீற்றிருக்கும் "சுயத்திலிருந்து" திரும்பி வரவேண்டும்!


▪︎ தன் சுய-சுத்தம் செய்வதிலிருந்து திரும்பி வரவேண்டும்!


▪︎ தானாக தெரிந்துகொண்ட வழியில் நடப்பதிலிருந்து திரும்பி வரவேண்டும்!


▪︎ பணத்தை நேசிப்பதிலிருந்து திரும்பி வரவேண்டும்!


▪︎ உலகத்தையும், உலகத்திலுண்டான மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமையிலிருந்து திரும்பி வரவேண்டும்!


எல்லாவற்றிற்கும் மேலாக:


▪︎ தேவனிடத்திற்கு திரும்பி வரவேண்டும்! 


▪︎ தன் முழு இருதயத்தோடும் அவரை அன்புகூர திரும்பி வரவேண்டும்!


▪︎ அவரையே தன் வாழ்வின் மையமாய் வைத்து, இதுமுதற்கொண்டு அவருடைய சித்தம் செய்திட திரும்பி வரவேண்டும்!


"சிலுவையில் கிறிஸ்து அடைந்த மரணத்தின்மீது" கொண்டிருக்கும் விசுவாசம், அவன் மனந்திரும்பினால் மாத்திரமே, அவனுடைய பாவங்களை மன்னித்திட முடியும்! அதன் பின்பு பரிசுத்த ஆவி அபிஷேகத்தின் வல்லமையை பெற்று, அது அளித்திடும் பெலனைக் கொண்டு, நாள்தோறும் தன் சுயத்தை வெறுத்து... அதனிமித்தமாய், தேவனை-மையமாய் கொண்டதோர் வாழ்க்கையை அவன் வாழ்ந்திட முடியும்!! இந்த சுவிசேஷத்தையே, இயேசுவும் அப்போஸ்தலரும் பிரசங்கித்தார்கள்! 


ஜெபம்:

பரம தகப்பனே! எங்கள் ஜீவியத்தில் நாங்கள் காணும் ஒவ்வொரு அசுசியையும் விட்டு, மனந்திரும்பி, இயேசுவைப்போல் மாறிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments