Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 22

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 22


🔸️ முழு அர்ப்பணமே கிறிஸ்தவ ஜீவியம்! 🔸️


ஒரு கிறிஸ்தவன், தான் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவுடன் கண்டிப்பாய் "தண்ணீர் ஞானஸ்நானம்" எடுத்திருக்க வேண்டும். தண்ணீர் ஞானஸ்நானம் எடுப்பது, ஒரு திருமண சான்றிதழ் பெறுவதற்கு ஒப்பாகும். அதேசமயம், ஒரு திருமண சான்றிதழ் மாத்திரமே நீங்கள் பெற்றுக் கொண்டதால், நீங்கள் திருமணமானவர்களாக மாறிவிட முடியாது. இதைப்போலவே, நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டால் மாத்திரமே "ஒரு கிறிஸ்தவனாய்" நீங்கள் மாறிட முடியாது! 


ஆம், நீங்கள் மெய்யாகவே திருமணம் செய்து கொண்ட பிறகுதான், நீங்கள் ஒரு திருமண சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்!! இதற்கு ஒப்பாகவே, உங்களை முழுமையும் கிறிஸ்துவுக்கு கொடுத்த பின்புதான், நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள முடியும்!! ஞானஸ்நானத்தில் நீங்கள் முழங்கும் சாட்சி என்னவெனில், "என் பழைய ஜீவியத்திற்கு நான் முற்றுப்புள்ளி வைத்து, இயேசு கிறிஸ்துவை என் ஜீவியத்தில் ஆண்டவராக ஏற்றுக்கொண்டேன்!" என்பதேயாகும்.

  

நல்ல கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் ஏராளம் பேசிக்கொள்வார்கள்! அதைப்போலவே, நீங்களும் இயேசுவிடம் பேசி,... அவர் உங்களிடம் வேதப்புத்தகத்தின் மூலமாய் பேசுவதற்கு "ஒவ்வொரு நாளும்" நீங்கள் செவி கொடுத்திட வேண்டும்!! ஒரு நல்ல மனைவி, தன் கணவனுக்கு மகிழ்ச்சி தராத யாதொன்றையும், ஒருபோதும் செய்யமாட்டாள்! எதைச் செய்தாலும், தன் கணவரோடு இசைந்து செய்திடவே விரும்புவாள்! ஒரு மெய்யான கிறிஸ்தவனும், "இயேசு பார்த்திட விரும்பாத சினிமாவைப் பார்ப்பது"... போன்ற கிறிஸ்துவுக்குப் பிரியமில்லாத யாதொன்றையும் செய்திட மாட்டான்! ஆம், அவன் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து செய்திட முடியாத "யாதொன்றையும்" செய்திட மாட்டான்!!


இது ஓர் ஆச்சரியம் நிறைந்த அற்புத வாழ்க்கை! ஏனெனில், இவ்வுலகில் யாருக்கும் கிடைக்காத "தலைசிறந்த நண்பரோடு!" நாம் வாழ்கிறோம்!! நாம் ஒருபோதும் தனிமையாய் இருப்பதில்லை... ஏனெனில், ஆண்டவராகிய இயேசு எக்காலத்தும், எந்த இடத்திலும் நம்மோடு கூடவே இருக்கிறார்! நம்முடைய பிரச்சனைகளை அவரிடம் பகிர்ந்துகொண்டு, அதை தீர்ப்பதற்குரிய உதவியையும் அவரிடம் கேட்டிட முடியும்.  


இந்த ஜீவியமே மகிழ்ச்சி நிறைந்த ஜீவியம்! கவலையிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை பெற்றிடும் ஜீவியம்! இந்த ஜீவியம், தன் முழுமையையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவனுக்கே உரியதாகும்!!    


ஜெபம்:

எங்கள் பரலோக தந்தையே! கணவன் மனைவி திருமண வாழ்விற்கு ஒப்பாக எங்கள் முழுமையும் கிறிஸ்துவோடு கலந்து வாழும் உத்தம ஜீவியத்தை எங்களுக்குத் தாரும்! 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments