Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 05

 "இன்று அவருடைய சத்தம்"


நவம்பர் 5


🔸️ முழு ஜீவியமும் கர்த்தருக்கு தருவதே உத்தமம்! 🔸️


தங்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சிலரிடமிருந்து நான் கடிதங்கள் பெறுவதுண்டு. அவர்கள் தங்கள் ஓய்வு வருடங்களை "தேவனுடைய ஊழியத்திற்கென" அர்ப்பணிக்க விரும்புவதாக எனக்கு கடிதம் எழுதுவார்கள். இது எப்படியெனில், "ஒரு கனவான் உங்கள் வீட்டிற்கு வந்தபோது, அவருக்கு முன்பாக தேனீர் அருந்திக் கொண்டிருக்கும் நீங்கள், முடிவில் டீ கப்பில் இருக்கும் மண்டியை அவருக்குத் தருவதற்கே" ஒப்பாகும்! இவ்வாறாகத்தான், இன்று ஜனங்கள் தேவனுக்குச் செய்கிறார்கள்!! இந்த உலகத்தில் பணம் சம்பாதிப்பதற்கென்றே தங்கள் முழு ஜீவியத்தையும் செலவழித்துவிட்டு, இப்போதோ தங்கள் வாழ்வில் எஞ்சிய "மண்டியை" தேவனுக்குத்தர விரும்புகிறார்கள்..... இது எத்தனை கொடிய அவமரியாதை!!


நாம் வாலிபமாய் இருந்த நாட்களிலேயே நம்முடைய ஜீவியத்தைத் தேவனுக்கு அர்ப்பணித்திருக்க வேண்டும். இவ்வாறு முழு ஜீவியத்தையும் அவரிடம் அர்ப்பணித்துவிட்டு, "அவர் என்ன கட்டளையிடுகிறாரோ" அதற்குப் பிரியமாய் வாழ்வதே உத்தமமானதாகும்! 


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்ப வருகையில், எண்ணற்ற விசுவாசிகள் மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாவார்கள் என்பது திண்ணம்! இவர்கள் பூமியில் சம்பாதித்துக் குவித்த பணம் முழுவதும், சிறு பிள்ளைகள் தாங்களாகவே "10-லட்சம்" "10-கோடி" என பேப்பரில் எழுதி "பிஸினஸ்" விளையாட்டில் சேர்த்த 'பேப்பர் பணத்திற்கு' ஒப்பாகவே அவர்களின் ஆஸ்தி, எந்த மதிப்பும் இல்லாதிருப்பதை அந்த நாளில் கண்டு திகைப்பார்கள்! (லூக்கா 12:20). ஆனால், இப்போது என்ன செய்ய முடியும்? 'வாழ்க்கையின் பந்தயமோ' முடிவடைந்துவிட்டது! தாங்கள் சேர்த்துக் குவித்த பிரயோஜனமற்ற குவியல்களைத்தவிர, இவர்களோ "நித்திய மதிப்புடைய" எதையும் சேர்த்துவைக்கவில்லையே! மேலும் இவர்கள் பூமியில் தேடி நாடியதெல்லாம் "மனுஷர் புகழ்ச்சிக்காகவே" இருந்ததால், அவையாவும் நித்தியத்தின் பிரகாசிக்கும் வெளிச்சத்தில், கனப்பொழுதில் "ஆவியாய்" மறைந்து போவதைக் காணும்போது, இவர்களின் ஏமாற்றம் சொல்லிமுடியாததாய் இருக்கும்!! 


ஆனால், தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய சித்தம் ஒன்றையே செய்து, தேவனுடைய மகிமைக்காக மாத்திரம் வாழ்ந்தவர்களோ, அந்நாளில் சொல்லி முடியா மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்களே!!  


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! பூமியின் மேன்மைக்கு பெரும் பங்கை தந்துவிட்டு, எஞ்சியதை உமக்குத் தரும் ஜீவியம் வேண்டாம்.... எங்கள் முழுமையும் உமக்கே அர்ப்பணிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments