"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 12
🔸️ ஐக்கியத்தில் கவனம் கொண்ட நல்லதோர் குடும்பம்! 🔸️
எபேசியர் 5:22 முதல் 6:9 வசனங்கள் வரை பரிசுத்தாவியானவர், குடும்பத்தில் காணும் கணவன்-மனைவி, பிள்ளைகள்-பெற்றோர்கள், வேலைக்காரர்கள்-எஜமான்கள் ஆகிய உறவுகளைக் குறித்தே பேசுகிறார். குடும்ப உறவுகளைக் குறித்து கூறும் இவ்வசனங்களுக்கு அடுத்து "உடனே" காணப்படும் 10-ம் வசனத்திலிருந்து வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளோடு உள்ள போராட்டத்தை பரிசுத்தாவியானவர் விவரித்து பேசுகிறார். இந்த உண்மை நமக்கு போதிப்பது என்ன? ஆம், நம் குடும்ப வாழ்வில் காணும் உறவுகளைத் தாக்குவதையே சாத்தான் தன் பிரதான தாக்குதலாய் கொண்டிருக்கிறான் என்பதையே நமக்கு போதிக்கிறது! இங்குதான், நாம் மிக விழிப்புடன் சாத்தானை மேற்கொண்டிட வேண்டும்!!
ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் புருஷர்களும் மனைவிகளும் தங்களுக்கு நடுவே 'இடைவெளி' ஏற்படுத்துகிறபடியால்..... அந்த 'இடைவெளி' ஊடாய் சாத்தான் தங்கள் குடும்பத்திற்குள் பிரவேசித்துத் தங்கள் பிள்ளைகள் தாக்கப்படுவதற்கு "கதவைத் திறந்துவிடுகிறார்கள்" என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். தன் பெற்றோர்களிடம் 'கரடுமுரடாய்' பேசிடும் ஒரு முரட்டாட்டம் கொண்ட பிள்ளை, ஒரு தொற்றுநோய்யைப்போல் தன் கணவனிடம் 'கரடுமுரடாக' பேசிடும் தன் தாயிடமிருந்தே பெற்றிருப்பான்! அல்லது தன் ஆண்டவருக்கு ஏதோ சில பகுதிகளில் முரட்டாட்டம் செய்திட்ட தன் தகப்பனிடமிருந்து பெற்றிருப்பான்!! இந்த பெற்றோர்களே முதலாவதாக இந்த நோயை வீட்டிற்குள் அனுமதித்திருக்க...ஏற்பட்ட தொற்று நோய்க்காக 'பாவம்' அந்தப் பிள்ளையைக் கடிந்துகொள்வதில் என்ன பிரயோஜனம்!! ஆகவே இந்த பெற்றோர்களே இங்கு முதலாவதாக மனந்திரும்ப வேண்டும்!!
உங்கள் வீட்டின் விஸ்தாரத்தைவிட அல்லது அங்குள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் உபயோக சாதனங்களைவிட "உங்கள் இல்லத்தின் ஐக்கியமே" அதிகளவு முக்கியம் நிறைந்ததாகும்! நீங்கள் ஒரு ஓலை குடிசை வீட்டில் வசித்தாலும், அங்கு நீங்கள் ஆண்டவரின் சீஷர்களாய் இருந்துவிட்டால்..... உங்கள் குடும்பத்தில் நிச்சயமாய் தேவனுடைய மகிமை இறங்கி தங்கிவிடும்!!
ஜெபம்:
எங்கள் அன்பின் தகப்பனே! எங்கள் குடும்பத்தின் ஐக்கியத்தில் கவனம் கொண்டு, பிரிவினை தோன்றச் செய்யும் பொல்லாத சாத்தானை ஜெயித்து வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments