Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 13

 "இன்று அவருடைய சத்தம்"


 நவம்பர் 13


🔸️ குடும்பத்தில் பொறுப்புள்ள தாய்மார்கள் வேண்டும்! 🔸️


தீத்து 2:5 கூறுகிறபடி, ஸ்திரீகள் "வீட்டில் உள்ள வேலைகள் செய்யும்படி தரித்திருக்க வேண்டும்" என்பதே அவர்களைக் குறித்த தேவ சித்தமாயிருக்கிறது. ஆகவே, தன் இல்லத்தைவிட்டு வெளியில் அலுவல் பார்க்கச் செல்லுவதினிமித்தம், எந்த தாயும் தன் வீட்டின் பொறுப்புகளை உதாசீனம் செய்யவே கூடாது. 1) தன் ஆண்டவர் 2) தன் கணவர் 3) தன் பிள்ளைகள் ஆகிய இந்த வரிசைப்படியே அவளுடைய பிரதான அன்பும் அர்ப்பணிப்பும் எப்போதும் இருந்திட வேண்டும். வேறு வழியில்லாமல் அப்படியே ஒரு வெளி அலுவலுக்கு அவள் செல்ல வேண்டியிருந்தாலும், அந்த முதல் மூன்று வரிசைக்குப் பின்னால் வரும், நான்காவது கவனத்திற்குரியதாகவே கண்டிப்பாய் அந்த அலுவல் இருந்திட வேண்டும்.


பொதுவாக பிள்ளைகளுடைய தாய்மார்கள் ஏன் அலுவலக வேலைக்காக வெளியே போகிறார்கள் என்பதற்கு இரண்டு காரணங்கள் தான் உண்டு:


1. ஜீவனம் பண்ணும் பொருட்டு! தங்கள் கணவரின் வருமானம் குடும்பத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாததால் வேலைக்குச் செல்லுகிறாள்!  


2) ஆடம்பர ஜீவியத்தை விரும்பி! கணவனும் மனைவியும் ஓர் உயர்தர வாழ்க்கையை இச்சிப்பதின் நிமித்தம் மனைவியும் வேலைக்குச் செல்கிறாள்! 


நீங்கள் வேலைக்குச் செல்லும் காரணம், பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் "ஜீவனம் பண்ணும் பொருட்டுதான்" என தேவனுக்கு முன்பாக நீங்கள் நேர்மையாகக் கூறமுடியுமென்றால், இதனிமித்தம் ஏற்ற விசேஷித்த தம் கிருபையைத் தேவன் உங்களுக்குத் தந்திடுவார் என்பதை நீங்கள் நிச்சயித்துக் கொள்ளலாம்.


அதற்கு பதிலாய், "ஆடம்பர ஜீவியத்தை விரும்பி" நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், நீங்கள் மெய்யாகவே "பெரிய அபாயத்தில் இருக்கிறீர்கள்" என்பதை உங்களுக்கு நான் எச்சரிக்க விரும்புகிறேன். இந்த அபாயத்தின் விளைவை பல வருடங்களுக்குப் பிறகுதான் நீங்கள் அறுவடை செய்வீர்கள். ஆம், உங்கள் பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டிய சமயத்தில், அவர்கள் உங்களுக்கு அடங்காதவர்களாகவும், தேவனுக்கு எவ்விதத்திலும் பிரயோஜனம் அற்றவர்களாகவும் மாறுவார்கள்! இவ்வாறு நிகழ்ந்த பின்பு, யாதொன்றை நீங்கள் செய்ய விரும்பினாலும் அது காலதாமதமான செயலாகவே இருந்துவிடும்! 


ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே! வேதம் கட்டளையிடும் பொறுப்புகளிலிருந்து சிறிதேனும் விலகிடாத தாய்மார்களாய் வாழ்ந்திட ஏற்ற கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments