இன்று "அவருடைய" சத்தம்
நவம்பர் 25
🔸️ அந்நிய நுகத்தில் பிணைக்கப்படக்கூடாது! 🔸️
நம்மை வஞ்சிப்பதற்கு பிசாசு ஏராளமான தந்திர வாக்குவாதங்களை கொண்டவனாய் இருக்கிறான். "என்ன? அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என 2 கொரிந்தியர் 6:14 வசனத்தை இப்படியா குறுகிய மனதோடு பார்ப்பது?" என்றே அவன் பவ்வியமாய் கூறி வருகிறான். அவன் சொல்கிறான் "எல்லாம் சரிதான், திருமணத்திற்கு பின்பு உன் கணவனை அல்லது மனைவியை சுவிசேஷத்தை விசுவாசிக்கும்படி சொல்! எல்லாம் தானாகவே சரியாகி விடும்" என்றும் இந்த இளைஞர்களின் காதுகளில் கிசுகிசுக்கிறான். "ஏய், இவ்வளவு வசீகரமான ஏற்ற பொருத்தத்தை இப்போது விட்டுவிட்டால், இந்த அளவுக்குப் பொருத்தம் பின்பு என்றுமே உனக்கு கிடைக்காமல் போய்விடும்!" எனவும் நயவஞ்சக அம்புகளை இந்த வாலிபர்களிடம் எய்கிறான்! இவனுடைய துர் ஆலோசனைக்கு செவி கொடுத்து மடங்கி விழுந்த வாலிபர் கூட்டங்கள் ஏராளம் ஏராளம்!!
வேத வசனத்திற்கு முரணாக திருமணமாகிவிட்ட குணப்படாத கணவனோ, அல்லது மனைவியோ, அதிகமான ஜெபத்திற்கு பிறகு மனம் மாறிய அற்புதம் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கத்தான் செய்கிறது! ஆனால் இதையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு தங்கள் ஆண்டவருக்கு கீழ்படியாமல் இருப்பது மகா கொடுமை! "நான் ஏன் சாத்தானை தாழ பணிந்து வணங்கினேன்!" என்பதற்கு காரணங்களை முன்வைப்பது கொடுமையிலும் கொடுமை!!
உங்கள் ஜீவியத்தில் இதுபோன்ற இந்த திருமண "இக்கட்டு நேரம்" வந்துவிட்டதா? நான் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்: நீங்கள் பெற்ற விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தோடு உறுதியுடன் நில்லுங்கள்! பிசாசு கொண்டு வந்த ஒவ்வொரு அவிசுவாச திருமண நுகத்தடியையும் மறுத்துவிடுங்கள்! அவன் கொண்டுவந்த நுகத்தடியை உங்கள் மீது பூட்டுவதற்கு பெரும்படையே திரண்டு வந்தாலும் இணங்கி விடாதீர்கள்! அவருடைய சித்தத்திற்காக காத்திருந்தது, ஜெபத்துடன் தேவனுடைய உதவியை நாடுங்கள்! அவர் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார்! அவரைக் கனப்படுத்திவிடுங்கள். . . அப்போது, தான் தெரிந்து கொண்ட துணையை அவர் உங்களுக்குத் தருவார்! தேவனே தெரிந்தெடுத்து நமக்குத் தருவது எதுவோ, அது மாத்திரமே நம் வாழ்வில் மகா மேன்மையும் அருமையுமானதாகும்!!
ஜெபம்:
அன்பின் தகப்பனே! உம் வசனத்திற்கு விரோதமாய் வாழ்ந்துவிட பிசாசின் நயவஞ்சகம் யாதொன்றிற்கும் அடிமையாகாதிருக்க உதவி புரிந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments