இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 13
🔸️ தேவனுக்குரிய அனைத்தும் 'மனப்பூர்வமாய்' வேண்டும்! 🔸️
"உற்சாகமாய் (மிகுந்த மகிழ்ச்சியுடன்) கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2கொரி 9:7).
இதனிமித்தமே, தேவன் மனிதனுக்கு, அவனுடைய மனந்திரும்புதலுக்கு முன்பாகவும், மனம் திரும்பிய பிறகும்..... ஏன் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற பின்பும்கூட அவனுக்கு முழு சுயாதீனம் அளித்திருக்கிறார். இவ்வாறு தேவனைப்போலவே நாமும் இருந்திட வேண்டுமென்றால், நாமும் மற்றவர்களை ஆளுகை செய்வதற்கு முயற்சிக்காமல், நம்மைவிட அவர்கள் வித்தியாசமாயிருப்பதற்கும், நம்மைவிட வித்தியாசமான கருத்துக்கள் கொள்வதற்கும், அவரவர் ஓட்டத்தின் விகிதப்படி ஆவிக்குரிய வளர்ச்சியடைவதற்கும் சுயாதீனம் கொடுத்திட வேண்டும்!!
எந்த கட்டாயத் திணிப்பும் பிசாசிற்குரியதேயாகும்! பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை "நிரப்புகிறார்". ஆனால், பிசாசுகளோ ஜனங்களைப் "பிடித்துக் கொள்கின்றன!". இங்கே வித்தியாசம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் ஒருவனை நிரப்பும்போது, அவன் இன்னமும் தான் விரும்பியதைச் செய்வதற்கு முழு சுதந்திரத்தையும் தந்து விடுகிறார். ஆனால் பிசாசுகளோ ஜனங்களைப் பிடித்துக் கொண்டால், அவைகள் அவர்களுடைய சுதந்திரத்தை முழுமையாய் பறித்துக் கொண்டு அவர்களை ஆளுகையும் செய்கின்றன!!
நாம் தேவனுக்குச் செய்திடும் எந்த ஊழியமாய் இருந்தாலும், அவைகள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும், சுயாதீனமாய் தானாகவே மனமுவந்து செய்யப்படாவிட்டால், அவையாவும் செத்த கிரியைகள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல், ஏதோ ஒரு பிரதிநலனைக் கருதியோ அல்லது சம்பளத்தின் அடிப்படையிலோ செய்யப்படும் எவ்வித தேவனுடைய ஊழியமும் செத்த கிரியைகளே ஆகும்! மற்றவர்களின் நிர்பந்தத்திற்கு ஆளாகி, தேவனுக்கு கொடுக்கும் எந்த பணத்திற்கும் தேவனைப் பொருத்தமட்டில் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லவே இல்லை!
கட்டாயத்தின் பேரிலோ அல்லது மனச்சாட்சியின் உறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காகவோ செய்யப்படும் ஏராளமான கிரியைகளைக் காட்டிலும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்குச் செய்திடும் ஒரு செயல் அற்பமானதாய் இருந்தாலும், அதற்கே தேவன் அதிக மதிப்பு தருகிறார்.
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! எவ்விதத்திலும் கட்டாய உணர்வில்லாமல், மனப்பூர்வமாய் உம்மை சேவித்திட எங்களுக்கு உதவும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments