Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 06

 இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 6


🔸️ கற்பனைகளில் யாதொன்றையும் 'சிறியது' என தள்ளிவிடக் கூடாது! 🔸️


கற்பனைகளைக் கைக்கொண்டு ஜீவிப்பதிலும் இரு சாராரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார்: 1) இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; 2) இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். 

(மத்தேயு 5:19).


மேலும், 18-ம் வசனத்தில் வானத்தையும் பூமியையும் காட்டிலும் தேவனுடைய பிரமாணங்களே மேலானது என இயேசு வலியுறுத்திக் கூறியதை கவனித்துப்பாருங்கள். பரலோகத்திலும் தேவனுடைய பிரமாணங்களே மேன்மையாகக் கருதப்படுவதால், ஒவ்வொரு தேவப்பிரமாணங்களையும் கைக்கொள்ள வேண்டும் என்றே இயேசு வலியுறுத்தினார். தேவப்பிரமாணங்களுக்கு மேன்மையான முக்கியத்துவத்தைத் தந்த இயேசு, இக்கற்பனைகளில், "சிறியதொன்றையாகிலும் மீறி" அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோக ராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னபடுவான் என எச்சரித்தார். இப்படிப்பட்டவன் ஒருவேளை அவனுடைய இரட்சிப்பை இழக்காமல் இருக்கலாம். ஆனால் அவனோ பரலோகராஜ்யத்தில் மிகவும் சிறியவன்!


பொதுவாய், விபச்சாரம் செய்யாதிருப்பாயாக; கொலை செய்யாதிருப்பாயாக போன்ற பெரிய கற்பனைகளை அநேக கிறிஸ்தவர்கள் கைக் கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் சிறிய கற்பனைகளை "சிறியதுதானே!" அவ்வளவு முக்கியமல்ல என அலட்சியம் செய்கிறார்கள்.


கற்பனைகளில் சிறியதோ அல்லது பெரியதோ என்பது பொருட்டல்ல. "இவைகளை தேவன் கட்டளையிட்டாரா?" என்பதே மிக முக்கியமாகும். நாம் தேவன்மீது கொண்டிருக்கும் மனப்பான்மையும், கீழ்ப்படிதலும் சிறிய கற்பனைகளை வைத்தே சோதிக்கப்படுகின்றது.  


சில சிறிய தேவ கற்பனைகளை எண்ணிப்பாருங்கள். உதாரணமாய், "தண்ணீர் ஞானஸ்தானம், ஜெபிக்கும்போது பெண்கள் தலையில் முக்காடு இடுவது....." போன்ற சிறிய கற்பனைகளே, நாம் விபச்சாரத்திற்கும், கொலைக்கும் விலகி இருக்கிறோமா என்ற பெரிய கற்பனைகளைக் காட்டிலும் வலிமை நிறைந்ததாய்......தேவனுடைய வார்த்தைக்கு நேராய் நம்முடைய மனோபாவம் எப்படி இருக்கிறது என்பதை புடமிட்டு சோதிப்பதாய் இருக்கிறது.    


ஆனால், இன்று தங்கள் ஊழியத்திற்கு 'திறந்த வாசல்' வேண்டுமென விரும்புபவர்கள், இச்சிறிய கற்பனைகளைத் தாங்களே கைக்கொண்டிருந்தாலும்கூட, அதை மற்றவர்களுக்கு பிரசங்கிக்காமல் மௌனமாய் இருந்து விடுகிறார்கள்! அது கூடாது!! 


ஜெபம்:

அன்புள்ள தந்தையே! உம்மில் அன்பு கூர்ந்து கைக்கொள்ளும் கற்பனைகளில், "சிறியது" என கருதி புறக்கணிக்காமலோ அல்லது மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லாமலோ இருந்திடாதிருக்க உதவி செய்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments