Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 28

 இன்று "அவருடைய" சத்தம்


 பிப்ரவரி 28


🔸️ திவ்வியம் மலர்ந்திடும் பொன்னான வாழ்க்கை! 🔸️


வீழ்ச்சியுற்ற நிலையிலிருந்து, திவ்விய சுபாவத்தை அடைவதற்கு இரு கட்டங்களைக் கடந்து வர வேண்டும். 1) முதலாவது, நாம் பாவத்தை மேற்கொண்டு ஜெயிப்பதற்குரிய கிருபையைப் பெறுவதுதான் (ரோமர் 6:14). ஆனால் இக்கட்டத்தில், நம் சத்துருக்களை சிநேகிப்பதற்கும், சபிப்பவர்களை ஆசீர்வதிப்பதற்கும்..... போன்ற திவ்விய சுபாவங்களுக்காய் நாம் இன்னமும் போராடத்தான் வேண்டியுள்ளது. 'இப்போது' கிருபையின் வல்லமையால் ஜெயம் மாத்திரமே பெற்று ஜீவிக்கிறோம். இவ்விதம் நாம் தொடர்ச்சியாய் எல்லா சோதனைகளிலும் உண்மையுள்ளவர்களாக இருந்தால் மாத்திரமே நாம் இரண்டாவது கட்டத்திற்குள் பிரவேசித்திட முடியும்! 


2) சோதனை நேரத்தில் தொடர்ச்சியாய் சிலுவையில் அறையப்பட்ட மாம்சமோ இறுதியில் மரணமடைகிறது! (ஒரு குறிப்பிட்ட பாவத்திற்காக). ஆம், இங்கேதான் நாம் திவ்விய சுபாவத்தில் பங்கடையும் கிரியை நடைபெறத் துவங்குகிறது! இங்கு இனிமேல் 'போராடுவது' தேவையில்லாமல் பூரண இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்து விடுகிறோம்!


இப்போது, தூய சிந்தை கொள்வதும், சத்துருவை சிநேகிப்பதும், சபிப்பவர்களை ஆசீர்வதிப்பதும் இயற்கையாகவே "சுபாவமாய்" ஊற்றெடுப்பதை நாம் ருசித்திட முடியும்! பார்த்தீர்களா, நம் நம்பிக்கை இதுதான்!! ஆம், தேவனின் சுபாவத்தையே நாம் பெற்றுவிட முடியும்!! சத்துருவை சிநேகிப்பதற்கும், கவலை கொள்ளாமல் இருப்பதற்கும், தூய சிந்தை கொள்வதற்கும் தேவன் போராட வேண்டியதில்லையே! இதே அவருடைய சுபாவத்தைச் சுதந்தரிப்பதற்குத்தான் நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம்!


".....திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் நமக்கு அருளப்பட்டிருக்கிறது"

(2 பேதுரு 1:4). இந்த அழைப்பு ஆச்சரியமன்றோ! பவுலைப் போல, கடந்தகால பின்னானவைகளை மறந்துவிட்டு.... இனி எஞ்சியுள்ள நாட்களில், இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு, இலக்கை நோக்கி ஆசையாய்த் தொடரக்கடவோம்!! 


ஜெபம்:

பரம சற்குருவே! உம்போன்ற "சற்குணத்தை" நாங்களும் பங்கடைந்திட, வழிவகுத்த இயேசு கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்திற்காக உமக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments