Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 01

 இன்று "அவருடைய" சத்தம்


ஏப்ரல் 1


🔸️ பிழைத்து வாழ சுயத்திற்கு மரியுங்கள்! 🔸️


1. நீங்கள் மறக்கப்பட்டு போனீர்களோ? வேண்டுமென்றே உங்களை ஒதுக்கி விட்டார்களோ? அப்படி இருந்தும்..... ஏற்பட்ட அவமானத்திற்காக அவர்களுக்கு தீமை செய்யாமல், ஆ!. . . . கிறிஸ்துவுக்காகப் பாடுபட நானும் தகுதி பெற்றேனே!! என இருதயத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்களென்றால், அதுவே சுயத்திற்கு மரித்தல்! 


2. உங்கள் நன்மையை தீமையாகத் தூற்றியும் உங்களின் கருத்துக்களை பகடியும் செய்கிறார்களா? இச்சமயம். . . உங்கள் இருதயத்தில் கோபம் எழுவதற்கும், உங்கள் நியாயங்களை முன்வைத்து தற்காத்துக் கொள்ள மறுத்துவிட்டு, அவர்களை அன்பான மௌனத்தோடு ஏற்றுக்கொள்வீர்கள் என்றால், அதுவே சுயத்திற்கு மரித்தல்! 


3. சகலமும் குழப்பம்! ஒழுங்கின்மை! காலந்தாழ்த்தி வருதல்! இது போன்ற எந்த முறைகேடுகளையும், அன்போடும் பொறுமையோடும் தாங்கிக் கொள்வீர்களா? உங்கள் கண்களுக்கு முன்பாகவே வீணாக்கப்படுவதையும், அறிவற்ற செயலையும், கொஞ்சம்கூட ஆவிக்குரிய உணர்வற்ற செயலையும் இயேசு சகித்தது போல, நீங்களும் சகிப்பீர்களென்றால் அதுவே சுயத்திற்கு மரித்தல்! 


4. ஒருவரோடொருவர் உரையாடும்போது உங்களை குறிப்பிட்டுப் பேசவேண்டுமென ஆர்வம் அற்றவர்களாய் இருக்கிறீர்களா? உங்கள் நற்கிரியைகளை பகிரங்கம் செய்வதற்கு ஆர்வம் அற்றவர்களாய். . . நீங்கள் "ஓர் அறியப்படாதவராக" இருப்பதை உண்மையாகவே விரும்புகிறீர்களென்றால், அதுவே சுயத்திற்கு மரித்தல்! 


5. எவ்வித உணவானாலும், உடையானாலும், எப்படிப்பட்ட சமுதாய சூழலானாலும், தனித்து விடப்படும் நிலையானாலும், தேவ சித்தத்தின்படி ஏற்படும் எவ்வித இடையூறானாலும்... அவைகளில் மனத்திருப்தி கொள்வீர்களென்றால், அதுவே சுயத்திற்கு மரித்தல்! 


6. உங்களின் தேவை ஏராளமாகி, உங்கள் சகோதரனின் தேவைகளோ சந்திக்கப்பட்டு ஐசுவரியம் அடைவதை காணும் போது.... உங்கள் சகோதரனோடு சேர்ந்து 'ஆவியில்' களிகூர்ந்து, பொறாமை அடையாதிருப்பீர்களென்றால், அதுவே சுயத்திற்கு மரித்தல்! 


7. உங்களைவிட குறைவான ஒருவர் உங்களுக்கு புத்தி சொல்லும்போது, உங்கள் இருதயத்திற்குள் எதிர்ப்பு எழாமல், அவைகளை.... தாழ்மையோடு உங்கள் உள்ளத்தில் மாத்திரமல்லாமல், வெளியரங்கமாயும் ஏற்றுக் கொள்வீர்களென்றால், அதுவே சுயத்திற்கு மரித்தல்! 


"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா 9:23).


ஜெபம்:

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே! "எங்கள் சிலுவை சுமப்பது" "எங்கள் சுயத்திற்கு மரிக்கவே" என்பதைக் காண தயை செய்தீர்! அனுதினமும் சிலுவை சுமந்து வர அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:- https://t.me/hisvoicetoday

‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧

[Google Drive • Ebook • Download Now]

https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA




Post a Comment

0 Comments