Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 14

 இன்று "அவருடைய" சத்தம்


 மார்ச் 14


🔸️ தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை! 🔸️


ஓரு விசுவாசி பாவம் செய்வதற்கும் ஓர் அவிசுவாசி பாவம் செய்வதற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு! அது எப்படியெனில், ஒரு பூனை தவறி சகதிக்குள் விழுவதற்கும், ஒரு பன்றி மன விருப்பத்தோடு அதே சகதிக்குள் பாய்ந்து விழுவதற்குமுள்ள வித்தியாசத்தை போலவேயாகும்! பூனை சகதியான சாக்கடையை வெறுக்கிறது. இருப்பினும் அப்பூனை அந்த சகதிக்குள் தவறி விழ முடியும். ஆனால், பன்றியோ சகதிக்குள் விழுவதை விரும்பித் தெரிந்து கொள்ளுகிறது. இதற்கெல்லாம் சுபாவமே அடிப்படைக் காரணமாகும். இப்படித்தான் இயேசுவின் சீஷன் ஒரு புதிய சுபாவத்தை பெற்று, தூய்மையை நேசித்து, பாவத்தை வெறுக்கிறான்!


பழைய மனிதன் பாவம் செய்ய விரும்புகிறான். புதிய மனிதனோ பாவம் செய்ய ஒருபோதும் விரும்பவே மாட்டான். ஆனால் புதிய மனிதன் பெலசாலியாய் இல்லாவிட்டால், மாம்சத்தின் இச்சைகள் நுழைந்துவிடாதபடி, தன் இருதயத்தின் கதவை இழுத்து மூடுவதற்கு அவனால் முடியாமல் போகலாம்!


அதற்கு காரணம் அவன் இச்சைகளை விரும்புகிறான் என்பது அல்ல. அப்படி அல்லவேயல்ல! அதற்கு ஒரே காரணம், அப்புதிய மனிதன் இச்சைகளை எதிர்த்து நிற்பதற்கு போதிய பெலனற்று இருக்கிறான்! அதற்கு காரணம், ஒருவேளை அவன் தன்னை வேதவசனத்தினால் போஷிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது அவன் ஜெபத்தின் மூலமாக பெலனடையாமல் இருந்திருக்கலாம்...! 


இப்போது பாவம் செய்வதற்கும் (committing sin) பாவத்தில் விழுவதற்கும் (falling into sin) உள்ள வித்தியாசத்தை தெளிவாக அறிந்து கொண்டீர்களா? ஆம், இந்த வித்தியாசத்தை நாம் அறிய வேண்டியது மிகவும் முக்கியமாகும். அப்போதுதான் எண்ணற்ற தேவையில்லாத குற்ற உணர்வுகள் நம் இருதயத்தைத் தாக்குவதிலிருந்து நம்மை நாம் தவிர்த்துக் கொள்ள முடியும்.


யோவான் அப்போஸ்தலர் தன் முதல் நிருபத்தில் இந்த வித்தியாசத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். 1) "பாவம் செய்கிறவன் " (அறிந்து பகிரங்கமாய் பாவம் செய்கிறவன்) பிசாசினால் உண்டாயிருக்கிறான் (1யோவான் 3:8) என யோவான் எழுதினாலும், விசுவாசிகளுக்கு எழுதும்போது, 2) "உங்களில் ஒருவன் பாவம் செய்வானானால் (அதாவது தவறி பாவத்தில் விழுவானானால்), நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்" (1யோவான் 2:1) என்றே தைரியப்படுத்தி எழுதினார்!!


ஜெபம்:

 பரிசுத்த பிதாவே! உம்மால் பிறந்த நாங்கள் பாவம் செய்வதில்லையே! நாங்கள் தவறி விழும்போது "உடனே" தூக்கிவிடுகின்ற உம் அன்பிற்கும் பரிவிற்கும் ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments