Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 19

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 19


🔸️ ஜெபவாழ்வு ஒரு ரம்மியமான வாழ்வு! 🔸️


வல்லமையான ஜெபத்திற்கு இரண்டு பிரதானமான காரியங்கள் கட்டாயமாகத் தேவை!


முதலாவது, தேவனால் அருளப்பட்ட மனபாரம் நமக்குள் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தேவன் மூலமாக, நம் இருதயத்திற்குள் வழங்கும் மனபாரமே, வலிமையான ஜெபத்திற்கு முதல் தேவையாகும்!


இரண்டாவது பிரதானமான தேவை, விசுவாசம். நாம் அவரில் நம்பிக்கை வைத்திடவே தேவன் நம்மில் எதிர்பார்க்கிறார். நம் அவிசுவாசம் அவரை அவமதிப்பற்கு ஒப்பாகும். ஏனெனில், அவிசுவாசம் தன்னை மறைத்து வைத்திருக்கும் செய்தி: "ஒரு பூமிக்குரிய தகப்பன் தன் பிள்ளைகளிடம் அக்கறை கொள்வதைக் காட்டிலும், இந்த தேவன் என்மீது வைத்திருக்கும் அக்கறை குறைவுள்ளது!" என்பதுதான். இவ்வித அவிசுவாசத்தில் செய்திடும் ஜெபத்தில் எந்த பலனும் கிடைப்பதில்லை!!


மேலும், ஜீவியத்தை சார்ந்தே ஜெபம் இருக்கிறது! ஒரு நீதியுள்ள நம் வாழ்க்கையைப் பொறுத்தே நம் ஜெபம் வலிமை கொண்டதாய் இருக்க முடியும்!! இவ்வித மனிதன் மாத்திரமே, தேவனுடைய மனதிற்கு உகந்த விதத்தில் ஜெபித்திட முடியும்!


நம் சரீரம் ஜீவிப்பதற்கு "சுவாசம்" எவ்வளவு அத்தியாவசியமோ, அதேபோல் நம் ஆவிக்கு "ஜெபம்" என்ற சுவாசம் அத்தியாவசியமாய் இருக்கும்படி தேவன் செய்திருக்கிறார். சுவாசிப்பதற்கு நமக்கு கஷ்டமாகிவிடுமென்றால், நம்மில் வியாதி இருப்பதைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகத்தான் அது இருக்கும்!!


நாம் நம் வாழ்வின் "முதலிடமானவைகளை" சரிசெய்து கொண்டு, தேவனையே நம் வாழ்வின் மையமாக்கும்போது, சுவாசத்திற்கு இடைஞ்சலான இந்த "ஆஸ்துமா" வியாதி பஞ்சாய்ப் பறந்தே போய்விடும். ஆம், ஜெபமோ ஒரு வலுக்கட்டாயமான சடங்காச்சாரமாக ஒருகாலும் இருந்திடாது!! ஜெபம், பேரானந்தமாயும், மிகுந்த பரவசமாயுமே இருந்திடும்!!


ஜெபம்:

பரம தந்தையே! உம்மை சார்ந்து வாழும் "ஜெபம்" எங்கள் வாழ்வில் ஒருபோதும் மந்தமாய் போய்விடாதிருக்க தயை புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments