Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 22

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 22


🔸️ பொருள் அறிந்து ஜெபித்திடுங்கள்! 🔸️


அஞ்ஞானிகளைப் போல அர்த்தமில்லாமல் ஒரே வாக்கியத்தை திரும்பத் திரும்பக் கூறி ஜெபிக்க கூடாது என இயேசு எச்சரித்தார் (மத்தேயு 6:7).


நாம் எத்தனை வார்த்தைகளைக் கூறி ஜெபிக்கிறோம் என்பதை தேவன் ஒருபோதும் காண்பதில்லை. அவர் காண்பதெல்லாம் நம் ஜெபத்தோடு இணைந்து வரும் இருதயத்தின் வாஞ்சையைத்தான்! வாஞ்சையோடு கூடிய இருதயத்தின் ஏக்கமே உண்மை ஜெபமாகும். இந்த வாஞ்சையின் ஏக்கம்தான் தேவனை கிட்டிச் சேர்ந்து பதிலையும் பெற்றுத் தருகிறது.  


நீங்கள் உண்மையாகவே பொருளை உணர்ந்து ஜெபிக்கும் பட்சத்தில், திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையை கூறினாலும் அது சரியே! கெத்சமனே தோட்டத்தில் ஒரே ஜெபத்தை இயேசு மூன்று தடவை ஜெபித்தார் (மத். 26:44). ஆனால் அவ்விதம் அவர் திரும்பத் திரும்ப ஜெபித்த வார்த்தைகள் அர்த்தமற்ற "கிளிப்பிள்ளையின்" ஜெபம் அல்ல! அவர் ஜெபித்த ஒவ்வொரு நேரமும் வார்த்தைகள் இருதயத்தின் பாரமாகப் பொங்கி வந்தது. 


இன்று கிறிஸ்தவர்கள் வாரத்தின் ஆறு நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில்தான் தேவனிடம் ஏராளமான பொய்களைக் கூறுகிறார்கள். ஏன் தெரியுமா? ஏனெனில், இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்தான், "என்னை முற்றும் ஒப்புவித்தேன் இயேசுவே" என்றும் "பொன்னும் வெள்ளியும் உமக்கே, அதில் ஒரு சல்லியும் எனக்கல்ல!" போன்ற வாசகங்கள் கொண்ட பாமாலை கீர்த்தனைகளை மிகவும் துணிந்து தேவனிடம் கூறி வாய் இனிக்க பாடுகிறார்கள்.


பாடல் புத்தகத்தில் மேற்கூறிய வார்த்தைகள் இருப்பதால் அதை நீங்கள் பாடுவதில் தவறில்லை. ஆனால், நீங்களோ அவ்வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து பாடவில்லையே! இவ்வித பாமாலைகளை பாடும் நீங்கள் "நான் தேவனுடன் நேருக்கு நேராய் பேசுகிறேன்" என்பதையும் உணரவில்லையே! இவை எல்லாம் என்ன? நீங்கள் தேவனிடம் பொய் சொல்கிறீர்கள்.


"மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும்" (மத். 12:36) என்றல்லவா இயேசு கூறினார். ஆனால் இன்றோ, தேவனுக்குரிய பயம் சிறிதும் இல்லாமல் இவ்வித ஆண்டவரின் கண்டிப்பான எச்சரிக்கையை உதாசீனம் செய்யும் கிறிஸ்தவ சந்ததியின் நடுவிலேயே நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்! நாம் அப்படி இருக்கலாகாது! 


ஜெபம்:

பரலோக தந்தையே! அர்த்தமில்லாமல் திரும்பத் திரும்ப கூறி இதுவரை வீணாகிவிட்ட எங்கள் ஜெப வாழ்வில், பொருள் உணர்ந்து ஜெபித்திட கிருபை தாரும்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments