இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 23
🔸️ பதில் பெற்றிடும் ஜெபமே, ஜெபம்! 🔸️
கர்மேல் பர்வதத்தின் நிகழ்ச்சியை நாம் யாவரும் அறிவோம். அங்கே ஒரு பக்கம் பாகாலின் தீர்க்கதரிசிகளாகிய 450 பேர் நின்று கொண்டிருந்தார்கள். மறுபக்கம் எலியா நின்று கொண்டிருந்தான். யாருடைய தெய்வம் உண்மையான தெய்வம் என கண்டு கொள்ளும்படி இவர்கள் இருவருமே வானத்திலிருந்து அக்கினி கொண்டு வருவதற்கு முயற்சித்தார்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு நீண்ட ஜெபக் கூட்டத்தை ஒழுங்கு செய்தார்கள். அவர்கள் ஜெபித்தார்கள்.... ஜெபித்தார்கள்.... ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். பின்பு குதித்தார்கள்.... நடனமாடினார்கள்.... கூக்குரலிட்டார்கள்!! ஆனால் அக்கினியோ இறங்கி வரவில்லை. இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும் தேவன் இவர்களின் உணர்ச்சிப் பெருக்கத்தை கண்டோ அல்லது அவர்களின் பலத்த சத்தத்தைக் கேட்டோ கொஞ்சமும் ஈர்க்கப்படவேயில்லை (1இராஜா. 18:20-29).
இப்போது எலியா ஜெபித்தான்! அவனின் ஜெபம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே இருந்தது! ஆனால் .... வானத்திலிருந்து அக்கினி இறங்கியது!! இதுதான் உண்மையான பரிசோதனை. நீங்கள் ஒரு நிமிடம் ஜெபித்தீர்களா அல்லது முழு இரவும் ஜெபித்தீர்களா என்பதல்ல கேள்வி. மாறாக, தேவன் உங்கள் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தாரா அல்லது இல்லையா என்பதுதான் அந்த பரிசோதனையாகும்.
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது (யாக்.5:16) என வாசிக்கிறோம். இந்த திருவசனத்தை குறிப்பிட்ட யாக்கோபு, இதைத் தொடர்புபடுத்தி எலியாவையே மாதிரியாக வைத்து எழுதினார். ஆம், பல மணி நேரங்கள் எலியா கூக்குரலிட்டதற்காக அவனின் ஜெபம் கேட்கப்படாமல், அவன் ஒரு நீதிமானாய் இருந்தபடியால்தான் அவனின் ஜெபம் கேட்கப்பட்டது!
ஜெபம்:
அன்பின் தந்தையே! ஏனோ, தானோ என பொறுப்பில்லாமல் ஜெபித்த எங்கள் ஜெப ஜீவியத்தை மாற்றும்! மெய்யாக பதில் பெறும் ஜெபத்தை நாடிட தயை செய்தருளும்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments